Saturday, 25 August 2018

தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்


சென்னை: தமிழக கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. அதேசமயம், சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் வெப்பச் சலனத்தால் அவ்வப்போது லேசான மழை பெய்கிறது. இதற்கிடையில், மழை குறைந்ததால் மேக கூட்டங்கள் காணப்படவில்லை. சென்னை, திருச்சி, மதுரை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் கடந்த 2 நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயிலின் உக்கிரம் அதிகரித்துள்ளது. நேற்றும் சென்னையில் வெயில் அதிகமாக காணப்பட்டது. மதுரையில் 101 டிகிரி, சென்னை, திருச்சி, தஞ்சாவூர், திருத்தணி, வேலூரில் தலா 100 டிகிரி வெயில் பதிவானது. இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார். சென்னையில் மாலை அல்லது இரவில் மழை பெய்யும்.

No comments:

Post a Comment