Sunday, 12 August 2018

பாக்.பார்லி.க்கு முஸ்லிம் அல்லாத முதல் இந்து எம்.பி.தேர்வு


இஸ்லாமபாத்: பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் முஸ்லிம் அல்லாத இந்து ஒருவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில், ஜூலை, 25ல் பொதுத்தேர்தல் நடந்தது. முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின், 'தெஹ்ரிக் - இ - இன்சாப்' கட்சி, 116 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது, பிரதமராக இம்ரான்கான் வரும் 18-ல் பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தானின் பிரதான எதிர்க்கட்சியான பெனாசி்ர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த மகேஷ்குமார் மலானி,55 என்ற இந்து மதத்தைச் சேர்ந்தவர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தர்பார்கர்-2 தொகுதியில் போட்டியிட்டு 1 லட்சத்து 6 ஆயிரத்து 630 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார்.இத்தொகுதி தனித்தொகுதி என்பதால் இவர் வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.
மகேஷ்குமார் கூறுகையில், இத்தொகுதியி்ல் 5 சதவீத இந்துக்களே உள்ளனர். எனினும் கட்சி சார்பில் போட்டியிட்டதால் மத ரீதியில் என்னை பிரித்து பார்க்காமல் எனக்கு முஸ்லிம்களும் ஓட்டளித்தனர் என்றார்.இதன் மூலம் பாகிஸ்தான் வரலாற்றில் பார்லி.க்கு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம் அல்லாத எம்.பி. இவர் தான் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment