Sunday, 12 August 2018

மணிக்கு 6.9 லட்சம் கி.மீ., வேகத்தில் செல்லும் செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது அமெரிக்கா. !!

சூரியனை ஆய்வு செய்யும் பார்க்கர் சோலார் புரோப் செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது அமெரிக்கா.

சூரியனை ஆய்வு செய்வதற்கான விண்கலத்தை நாசா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. மனிதர்களால் தயாரிக்கப்பட்ட வேகமான பொருள் என்ற பெருமை இந்த விண்கலத்திற்கு கிடைத்துள்ளது. இது சூரியனை அடைய 7 ஆண்டுகள் ஆகும்.


*விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் இருப்பது நாசா. இது முதன்முதலாக சூரியனை ஆய்வு செய்ய 'பார்கர் சோலார் புரோப்' என்ற விண்கலத்தை தயாரித்தது. புளோரிடாவில் இருந்து, டெல்டா 4 ராக்கெட் மூலம் நேற்று விண்ணில் செலுத்தப்படுவதாக இருந்தது. இதற்கான கவுன்ட்டவுனும் தொடங்கியது. ஆனால் ராக்கெட் புறப்பட ஒரு நிமிடம், 55 வினாடிகள் இருந்த போது, தொழில்நுட்ப பழுது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஏவுவது ஒத்திவைக்கப்பட்டது.இந்திய நேரப்படி இன்று மதியம் 1 மணிக்கு இது விண்ணில் ஏவப்பட்டது.*

*இது ஒரு சிறிய கார் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் எடை 612 கிலோ. நீளம் 9 அடி, 10 இன்ச். 1,400 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தை தாங்கும். இதற்காக கார்பனால் ஆன வெளித்தகடு பொருத்தப்பட்டுள்ளது. மணிக்கு 6.9 லட்சம் கி.மீ., வேகத்தில் செல்லும். இந்த விண்கலம் சூரியனின் மேற்பரப்பு அருகே, 59.5 லட்சம் கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்படும். இதுவரை எந்தவொரு விண்கலமும், இதனை எட்டியதில்லை*.

*சூரியன் - பூமி இடையிலான துாரம் 14.9 கோடி கி.மீ. நமது பூமியின் பரப்பை வளிமண்டலம் சூழ்ந்திருப்பதை போல, சூரியனின் பரப்பை, 'கொரோனா' எனும் பிளாஸ்மா மண்டலம் சூழ்ந்துள்ளது. இந்த கொரோனாவுக்குள்ளேயே சென்று, இந்த விண்கலம் ஆய்வு செய்ய உள்ளது.அமெரிக்க ஆராய்ச்சியாளர் யூஜின் பார்கரை கவுரவப்படுத்தும் விதமாக, இதற்கு 'பார்கர் சோலார் புரோப்' என பெயரிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment