Wednesday, 29 August 2018

6,000 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி!


நாடு முழுவதும் 6,000 ரயில் நிலையங்களில் இணையப் பயன்பாட்டுக்கு உதவும் வகையில் வைஃபை வசதி செய்து தரப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று (ஆகஸ்ட் 28) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல். அப்போது, ''ரயில் பயணிகளுக்காக, 6,000 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும். விவசாயம், கற்பித்தல் போன்ற தொழில்கள் சம்பந்தமான கூடுதல் தகவலைப் பெறுவதற்கு உதவக்கூடிய வகையிலும் வைஃபை வசதி செய்து தரப்படும். கிராமங்களில் வசிப்பவர்கள், குழந்தைகள், விவசாயிகள், உழைக்கும் பெண்கள் ஆகியோர் ரயில் நிலையங்களில் உள்ள வைஃபை வசதி காரணமாகப் பயனடைவார்கள்" என்று அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "பயணிகள் விமானங்களில் நிறுவப்பட்டதைப் போலவே, ரயில்களிலும் விரைவில் பயோ-ஸ்ட்ரீம் கழிப்பறைகள் பொருத்தப்பட உள்ளன. ரயில்வே துறைக்கான ஹெல்ப்லைன் திட்டங்கள் தற்சமயம் சில தொழில்நுட்பக் காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளன. அவை சரி செய்யப்பட்டபின், மீண்டும் ஹெல்ப்லைன் திட்டங்கள் நிச்சயம் செயல்படுத்தப்படும்" என்று உறுதியளித்தார் பியூஷ் கோயல்.

No comments:

Post a Comment