Sunday, 12 August 2018

பறவை சுழற்சி யோகாவில் '100 பல்ட்டி' : 10 வயதில் 'உலக சாதனை'யை எட்டிய சிறுமி


விருதுநகர் : நடைபயிற்சி, ஜிம், விளையாட்டு என பலவிதமான உடற்பயிற்சிகள் இருந்தாலும், யோகாவில் தான் உடல், மனம், உளவியல், மூச்சு எனப் பல நிலைகளின் செயல்பாடுகளை சீராக வைத்திருக்க முடியும் என்பதை விருதுநகர் அல்லம்பட்டி எம்.வி.எம்., சி.பி.எஸ்.சி., பள்ளி 4 ம் வகுப்பு மாணவி நந்திதா செய்து காட்டிய யோகா கலையில் பார்க்க முடிந்தது. பெண்கள் எளிதான 'யோகா' மட்டும் அல்ல, எல்லாவிதமான 'யோகா'க்களையும் செய்யலாம் என்பதற்கு நந்திதாவே சாட்சி.யோகாவை உடம்பை வளைத்து, திரும்பி, நீட்டி, மூச்சினை எடுத்து விடும் சிக்கலான உடற்பயிற்சி என நினைப்பது தவறு. யோகாவின் அடிப்படை கோட்பாடுகள் நம்மை நாமே அறிந்து கொள்தல், மனதை கட்டுப்படுத்துதல் ஆகிய இரண்டும் தான்.நம்முடைய வேதங்களில் கூட தியானம், யோகா பற்றிய குறிப்புகள் உள்ளது. இந்தியாவில் 5000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்த யோகாவின் அருமை பெருமைகள் இன்று உலகமெங்கும் பரவி வருகிறது.விருதுநகர் ஆக்னா யோகாலயா ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் மற்றும் சுவாமி விவேகானந்த யோகா, ஸ்கேட்டிங் கழகம் சார்பில் நடந்த உலக சாதனை விழாவில் நந்திதா, சகுனி ஆசனம், அந்தமுக சகுனி ஆசனம் கலந்து தொடர்ச்சியாக 100 முறை பல்டி அடித்து 'யுனிவர்சல் புக் ஆப் ரிக்கார்ட்' முயற்சி செய்துள்ளார்.தொடர்ந்து 3:45 நிமிடங்கள் இரண்டு யோகா ஆசனங்களை கலந்து 'பறவை சுழற்சி யோகா'வில் 100முறை பல்டி அடித்தபடி யோகா செய்தது அங்கிருந்தவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இதோடு மற்றொரு உலக சாதனையாக 'பேக் பிளான்க் ரீகிளைண்ட் கிரன்ச் யோகா'வில் 16 முறை உடம்பை வளைத்து, நெளித்து அசத்தி விட்டார் நந்திதா.
வியர்வைக்கு கிடைத்த பெருமைநான் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறேன். என் மகளை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறேன். வருமானம் குறைவு என்றாலும், மகள் ஏதாவது ஒரு துறையில் உலக அளவில் சாதிக்க வேண்டும் என யோகா வகுப்பில் சேர்த்து விட்டேன். என்னுடைய வியர்வைக்கு என் மகள் நந்திதா 10 வயதிலே பெருமை சேர்த்து விட்டாள். அவளால் எங்கள் குடும்பம் பெருமைப்படுகிறது. யோகாவில் இன்னும் பல சாதனைகள் புரிய என் மகளுக்கு உறுதுணையாக இருப்பேன்.-முருகேசன், நந்திதா தந்தை, விருதுநகர்கின்னஸ் சாதனையாக...'யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' முயற்சியாக இரண்டு உலக சாதனைகளை நந்திதா நிகழ்த்தியுள்ளர். முதலில் 'பேக் பிளான்க் ரீகிளைண்ட் கிரன்ச் யோகா'வில் 16 முறை உடம்பை வளைத்து, நெளித்து எழுந்தார். இதற்கு முன் ஆந்திர மாநில மாணவி 14 முறை செய்ததே சாதனையாக இருந்தது. தொடர்ந்து 3 நிமிடங்கள் 45 வினாடிகள் சகுனி ஆசனம், அந்தமுக சகுனி என இரண்டு யோகா ஆசனங்களை கலந்து 'பறவை சுழற்சி யோகா'வில் 100 முறை பல்ட்டி அடித்தார். இந்த யோகா முயற்சி இதுவே முதன்முறை என்பதால் யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே யுனிவர்செல் அச்சிவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இடம் பெற்று சான்றிதழ் பெற்று விட்டார்.இந்த யோகா முறையில் இதுவரை உலகில் யாருமே சாதனை ஏதும் புரியவில்லை. எனவே இது கின்னஸ் சாதனையாக ஏற்கப்படும்.-- ஜெயகுமார், யோகா ஆசிரியர், ஆக்னா யோகாலயா, விருதுநகர்.

No comments:

Post a Comment