Sunday, 8 July 2018

கொசு கடிக்கற இடத்துல தடிச்சு போயிடுதா?... இதுல ஏதாவது ஒன்ன தடவுங்க...


எலுமிச்சை தைல எண்ணெய்

தேவையான பொருட்கள்

10 மிலி எலுமிச்சை தைல எண்ணெய்
90 மிலி மற்ற எண்ணெய் (ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய்)

செய்முறை

ஒரு 100 மிலி பாட்டிலை எடுத்துக் கொள்ளவும்.
அதில் 10 மிலி எலுமிச்சை தைல எண்ணெய்யை சேர்க்கவும்.
மேலும் அந்த பாட்டிலில் 90 மிலி ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய்யை சேர்க்கவும்.
இந்த எண்ணெய்யை நன்றாகக் கலந்து கொள்ளவும்.
கொசு கடித்த இடங்களில் இந்த எண்ணெய்யை தடவவும்.
நீங்கள் வெளியில் செல்லும்போது அல்லது வீட்டில் இருக்கும்போதும் இந்த எண்ணெய்யை அடிக்கடி உங்கள் உடலில் தடவிக் கொள்ளலாம்.

இது ஏன் வேலை செய்கிறது?

எலுமிச்சை தைல எண்ணெயில் சிட்ரோ நெல்லல் மற்றும் பி-மீத்தேன் 3, 8-டியோல் (PMD) போன்ற கூறுகள் உள்ளன. சிட்ரோ நெல்லல் கொசுக்களை ஓரளவிற்கு விரட்டும், ஆனால் PMD இத்தகைய சிறிய உயிரினங்களை கொள்வதில் சிறந்த தீர்வைத் தருகிறது.

குறிப்பு

எலுமிச்சை தைல எண்ணெயில் PMD குறைந்த அளவில் மட்டுமே உள்ளது. ஆகவே இந்த எண்ணெய்யை பதப்படுத்தி சுத்தீகரிப்பதன் மூலம் இதில் உள்ள சிட்ரோ நெல்லல் ஒரு பகுதி, PMD யாக மாற்றம் பெறுகிறது. ஆகவே பதப்படுத்தப்பட்டு சுத்தீகரிக்கப்பட்ட எலுமிச்சை தைல எண்ணெய்யை உடலில் தடவுவதால் கொசுக்களை எதிர்த்து சிறந்த முறையில் இது போராடுகிறது.


 வேப்பெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்

தேவையான பொருட்கள்

10 துளி வேப்பெண்ணெய்
30 மிலி தேங்காய் எண்ணெய்

செய்முறை

வேப்பெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்யை ஒன்றாகக் கலந்து கொள்ளவும். கொசுக்கள் கடிக்கும் உடல் பகுதிகளில் நன்றாகத் தடவவும்.
ஒரு நாளைக்கு இரண்டு முறை இதனை தடவலாம்.

வேப்ப மர கொட்டை மற்றும் பழத்தில் இருந்து வேப்பெண்ணெய் எடுக்கப்படுகிறது. இதன் கலவை மற்றும் வாசனையால் கொசுக்களை விரட்டும் தன்மை அதிகம் உள்ளதாக நம்பப்படுகிறது. உண்மையில், 2% வேப்பெண்ணெய்யுடன் , தேங்காய் எண்ணெய் கலந்து பயன்படுத்துவதால், பல இன கொசுக்களின் பாதிப்பில் இருந்து தப்ப முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

No comments:

Post a Comment