Tuesday, 10 July 2018

வாட்ஸ் அப் புதிய தகவல்நீங்கள் வாட்ஸ் அப் பயன்படுத்துபவரா? உங்களுக்கு இது கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்

*வாட்ஸ் அப்பில் பரப்பப்படும் வதந்தியாவில்
இது வரை இந்தியாவில் 24 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர்*


 *இதனால் போலி செய்திகள் மற்றும் வதந்தி பரவுவதை தடுக்கும் வகையில் வாட்ஸ் அப் நிறுவனத்தை நிர்வகித்து வரும் பேஸ்புக் நிறுவனம் 10 முக்கிய காரணிகளை தெரிவித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது*


*நண்பர்கள், குடும்பத்தினர் மத்தியில் வாட்ஸ் அப் மூலம் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் இந்தியர்கள் இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது*



*1. போலி தகவல்கள் பெரும்பாலும் பார்வேர்டட் மெசேஜ் மூலம் பரவுகிறது. அதனால் பார்வேடட் மெசேஜ்கள் மீது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்*


*வாட்ஸ் அப்பில் வரும் ஒரு மெசேஜ் பார்வேர்டட் செய்யப்பட்டதா?*


 *அல்லது அனுப்பிய நபரால் சுயமாக தயாரிக்கப்ட்டதா? என்பதை அறிய முடியாத நிலை இருந்தது. இந்த நிலை தற்போது மாற்றப்பட்டுள்ளது*


 *இன்று முதல் இதை கண்டுபிடிக்க பிரத்யேக வசதி வாட்ஸ் அப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த வசதி அனைத்து பயனீட்டாளருக்கும் கிடைக்கும் வகையில் வாட்ஸ் அப் செய்யவில்லை*



*2. மெசேஜின் தோற்றத்தை பார்த்து உடனடியாக ஒரு முடிவுக்கு வரக் கூடாது. உதாரணமாக இமாச்சலில் உள்ள ஒரு ஆரஞ்சு மரத்தில் மாங்காய் காய்க்கிறது என்று தகவல் வந்தால் அதை நம்புவதற்கு முன்பு ஆய்வு செய்ய வேண்டும்*



*3. உங்களை ஆத்திரமூட்டும் வகையில் ஒரு செய்தி வந்தால் உடனடியாக பதில் தெரிவிக்காமல் அந்த தகவலின் நம்பகத்தன்மையை உறுதி செய்த பின்னரே பதிலளிக்க வேண்டும்*



*4. அதிகமாக வைரலாகும் தகவல்கள் மீது கவனமாக இருக்க வேண்டும். இத்தகைய தகவல்களுக்கு ஸ்மைலீஸ் உள்ளிட்ட பிரதிபலிப்புகள் அதிகம் இருந்தாலும் கட்டாயம் தகவலை உறுதி செய்து கொள்ள வேண்டும்*


*5. போட்டோஷாப்பில் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட புகைப்படங்கள் பரவலாம். அதனால் இத்தகைய புகைப்படங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்*


*6. போட்டோவுடன் அனுப்பப்படும் லிங்கையும் மாற்றி அமைக்க கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கிறது. அதனால் பெரிய இணைய தள முகவரில் இருந்து புகைப்படம் பகிரப்பட்டாலும் அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும்*



*7. வதந்தி, போலி செய்திகளை எதிர்கொள்ள ஒரு அருமையான யோசனை. அனைத்து தகவல்களையும் வாட்ஸ் அப் மூலம் பெறக் கூடாது. அதோடு செய்திதாள் அல்லது டிவி செய்திகள் போன்றவற்றோடு வாட்ஸ் அப் தகவல்களை ஒப்பிட்டு உறுதி செய்து கொள்ள வேண்டும்*



*8. ஒரு தகவலை உறுதிப்படுத்தாமல், அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்யாமல் எந்த ஒரு மெசேஜையும் பார்வேர்ட் செய்யக் கூடாது*


*9. ஒரு நபரோ அல்லது ஒரு குறிப்பிட்ட செல்போன் நம்பர் தவறான, போலியான, வதந்தி செய்திகளை பரப்புவதை கண்டுபிடித்தால் உடனடியாக அவரை பிளாக் செய்துவிட வேண்டும்*



*10. வதந்தி பரவுவது வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு சங்கடம் ஏற்படுத்தியுள்ளது. அதோடு மக்களும் பாதி க்கப்படுகின்றனர். அதனால் வைரலாகும் மெசேஜ்கள் மீது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்*

No comments:

Post a Comment