Saturday, 7 July 2018

மாணவனை துடைப்பத்தால் அடித்த ஆசிரியை 'சஸ்பெண்ட்'!!

மூணாறு: கேரளா, இடுக்கி அருகே அரசு பள்ளியில் தமிழில் சரியாக எழுதாததால் 1ம் வகுப்பு
மாணவன் ஹரீைஷ,6, துடைப்பத்தால் அடித்த ஆசிரியை ஷீலா அருள் ராணி 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.இடுக்கி மாவட்டம் வண்டிபெரியாறு பகுதியைச் சேர்ந்தவன் ஹரீஷ்,6. அங்குள்ள தமிழ் வழிக் கல்வி அரசு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வருகிறார்.ஜூலை 4ல்வகுப்பில் தமிழில் சரியாக எழுதவில்லை எனக் கூறி ஆசிரியை ஷீலா அருள் ராணி, அவனை துடைப்பத்தால் அடித்துள்ளார். அதனால் முதுகில் காயம் ஏற்பட்டது.ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சேர்த்த பெற்றோர், போலீசார் மற்றும் 'சைல்டு லைன்' அமைப்பிடம் புகார் அளித்தனர்.ஆசிரியையை 'சஸ்பெண்ட்' செய்து மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment