Wednesday, 11 July 2018

நீட் கருணை மதிப்பெண் உத்தரவு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

 நீட் கருணை மதிப்பெண் உத்தரவு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்
செய்யப்பட்டது.  மனுதாரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யுமான டி.கே.ரங்கராஜன் கேவியட் மனுவை தாக்கல் செய்தார்.


  முன்னதாக மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வின் போது தமிழில் கேட்கப்பட்ட கேள்விகள் தவறாக மொழிப பெயர்க்கப்பட்டதாக கூறி ரங்கராஜன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.



  இந்த வழக்கில் நீட் தேர்வு வினாத்தாளில் 49 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதால் தமிழில் எழுதிய அனைவருக்கும் 196 கருணை மதிப்பெண்கள் வழங்க ஐகோர்ட் மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.


   மேலும் இதன் அடிப்படையில் புதிய தரவரிசைப் பட்டியலை 2 வாரத்தில் வெளியிடவும், அதுவரை கவுன்சலிங் நடைமுறைகளை நிறுத்தி வைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


  இந்நிலையில் இது தொடர்பாக சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தனது தரப்பு விளக்கங்களையும் கேட்க வேண்டும் எனக் கூறி ரங்கராஜன் நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தார்.இதனைத் தொடர்ந்து சிபிஎஸ்இ நிர்வாகம் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது.


  எனினும்  உச்சநீதிமன்றத்தில்  சிபிஎஸ்இ நிர்வாகம் சார்பில் தற்போது வரை எந்த ஒரு புதிய மனுவும் தாக்கல் செய்யப்பட வில்லை. இதற்கிடையே சிபிஎஸ்இ நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் வாயமொழியாகவும்  கோரிக்கை வைப்பார்கள்.


அதாவது மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய சிபிஎஸ்இக்கு அனுமதி வேண்டும் என்று சிபிஎஸ்இ சார்பில் யார் வேண்டுமானாலும் கோரிக்கை வைக்கலாம். ஆனால் தற்போது வரை வாயமொழியாகவும் கோரிக்கை வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment