Sunday, 8 July 2018

இந்த இடங்கள் எங்கு உள்ளது என்று யாருக்கேனும் தெரியுமா இந்த இடம் என்னவென்று யாருக்கேனும் தெரியுமா????


இது தான் ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்.
இன்று ப்ளூடோ என்ற ஓன்பதாவது கோள் நமது பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கபடுவதற்கு முக்கியமான காரணம் இந்த இடம். வரலாற்று சிறப்புமிக்க இடம். நிறைய எரிக்கல் , துணை கோள்கள் , நம்மை போல் உயிரினங்கள் வாழ்கிறார்கள் என்று சந்தேகிக்கப்படும் சூரிய குடும்பங்கள் , இன்னும் இங்கு நம்மவர்கள் ஆற்றி உள்ள சாதனைகள் கணக்கில் அடங்காது , அப்படி பட்ட சிறப்புமிக்க இடத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா ?

இது வேலூர்-திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் ஜவ்வாது மலைகளில் காவலூர் என்ற சிற்றூரில் அமைந்துள்ளது.
இதனை நமது முன்னால் பிரதமர்.திரு. இராஜீவ் காந்தி யால் திறந்து வைக்கப்பட்டது. இந்த இடம் பூமத்திய ரேகை ( Equator ) மையப்பகுதியில் அமைந்துள்ளது. அமேரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் கூட Northern Hemisphereஐ மட்டும் தான் ஆராய்ச்சி செய்ய முடியுமாம். ஆனால் இந்த பகுதிகளில் இருந்து Northern and Southern Hemispheres களை ஆராய்ச்சி செய்ய முடியும் என்பதுதான் இந்த இடத்தின் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. Southern Hemisphere ல துள்ளியமாக ஆராய்ச்சி செய்ய அமெரிக்கர்கள் கூட இங்கு தான் வர வேண்டும்.
மற்றுமொரு முக்கியமான அம்சம் இங்கு இருந்து மட்டுமே 300 நாட்களுக்கு மேலாக திறந்த வான் வெளி (Clear Sky ) கிடைக்கின்றன.
இந்த தொலை நோக்கி யின் கண்ணாடி( Lens ) 9.3 ( 90 இன்ச் ) மீட்டர் Diameter , உங்களால் நம்ப முடிகிறதா.??? இன்னும் ஆச்சரியமான விஷயம் இது முழுக்க முழுக்க இந்தியர்களால் குறிப்பாக தமிழகத்தில் தயாரிக்கப்பட்டது. இங்கு 6 இன்ச், 10 இன்ச் , 13 இன்ச் , 18 இன்ச் , 24 இன்ச் , 30 இன்ச் , 40 இன்ச் , 48 இன்ச் மற்றும் 90 இன்ச் Telescope பயன்பாட்டில் உள்ளது. இந்த 48 இன்ச் Telescope ஜெர்மன்-ரஷ்யா-இந்தியா கூட்டு தொழில் நுட்பத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இங்கு நடைபெற்ற கண்டுபிடிப்புகள் மூலம் நமது நாடு உலக அரங்கில் தடம் பதித்தது வார்த்தைகளாளும் மற்றும் எழுத்துக்களாலும் கூற இயலாது.

இங்கு ஒவ்வொரு சனிக்கிழமை மாலை 5:00 மணிக்கு மேல் பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் இங்கு அனுமதிக்கபடுவார்கள்.அவர்களுக்கு உங்கள் கண்களுக்கு பூமியை தவிர்த்து அனைத்து கிரகங்கள், புகழ்பெற்ற நட்சத்திரங்கள், கோள்கள், துனை கோள்கள் காண்பிக்கப்படும். உங்கள் பிள்ளைகள் பள்ளி புத்தகங்களில் மட்டும் படிக்கும் அவையை அவர்கள் புற கண்களுக்கு காண்பிக்க ஒரு அரிய வாய்ப்பு.
இங்கு அருகில் பீமா நீர்வீழ்ச்சி, குழந்தைகளுக்கான பூங்கா , படகு சவாரி, கற்கால மனிதர்கள் வாழ்ந்த வீடு, ஆங்கிலேயர்கள் கட்டிய கண்ணாடி மாளிகை, இயற்கை மருத்துவ பூங்கா, இயற்கை மலைத்தேன், பலாப்பழம், கொய்யா, ராம் சீதா பழம் அதிகமாக கிடைக்கும்.
உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் , உங்கள் கண்களுக்கு மிருகங்கள் கண்களில் படலாம்.
இங்கு தங்கும் விடுதிகள் இல்லை , வனத்துறை மற்றும் டிராவல்ஸ் பங்களா மட்டுமே உள்ளது. உணவிற்கு ஜமூனாமத்தூர் மற்றும் ஆலங்காயத்திற்கு தான் செல்ல வேண்டும். இது மிகவும் அடர்தியான காட்டு பகுதி ஆதலால் டார்ச் லைட் போன்ற உபகரணங்கள் மிகவும் முக்கியமானது.
இந்த இடத்திற்கு செல்ல 1. பெங்களூர்- திருப்பத்தூர்-ஆலங்காயம்-காவலூர். 2.சென்னை-வேலூர்-வாணியம்பாடி - ஆலங்காயம்-காவலூர் ,3. சேலம்- அரூர் - ஊத்தங்கரை - திருப்பத்தூர் - ஆலங்காயம்-காவலூர் ,4.பாண்டிச்சேரி - திருவண்ணாமலை - போளூர் - ஜமூனாமத்தூர் - காவலூர்


*Indian Institute of Astrophysics,Vainu Bappu Observatory ,Kavalur Tamilnadu*

No comments:

Post a Comment