Sunday, 8 July 2018

தூங்கி எழுந்தவுடன் ஒரு நிமிடத்திற்குள் இதை செய்ய வேண்டும்


1) காலையில் தூங்கி எழுந்த ஒரு நிமிடத்திற்குள் தண்ணீர் குடியுங்கள். தினமும் காலையில் 300 மில்லி லிட்டர் அளவிலான நீரை அருந்தினால் உடலில் வளர்சிதை மாற்றம் வழக்கத்தை காட்டிலும் 24% அதிகரிக்கிறது.

2) அதிக அளவிலான நீரை அருந்துவதால் சருமத்தில் சுருக்கமில்லாமல் அழகாக பார்த்துக் கொள்ள முடியும்.

3) உடலில் உள்ள தேவையற்ற நச்சுகள் மற்றும் கெமிக்கல்களை நீக்க இது உதவுகிறது. உடலின் ஒட்டுமொத்த செயல்திறனும் அதிகரிக்கிறது.

4) உடலில் ஏற்படும் அதிகப்படியான பசியை குறைக்கிறது. இதனால் உடல் பருமனை கட்டுக்குள் வைக்க முடிகிறது. கலோரிகள் குறைவாக எடுத்துக் கொள்ளப்படுவதால் உடலில் உள்ள கொழுப்புகளின் தேக்கமும் குறைகிறது.

5) உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொண்டாலே போதும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் நமக்கு எந்த பாதிப்பும் அவ்வளவு சீக்கிரமாக நெருங்காது.

தொடர்ந்து ஒரு மாதம் காலையில் நீர் அருந்தி பாருங்கள். மாற்றத்தை நீங்களே உணரமுடியும்.

No comments:

Post a Comment