Thursday, 14 June 2018

சத்தியமங்கலம் வட்டாரத்தில் SSTA வின் முயற்சியால் பதவிஉயர்வு குளறுபடியில் ஏற்படுத்தப்பட்ட அநீதி களையப்பட்டு நியாயம் நிலைநாட்டப்பட்டது.


*நீதி வென்றது. ..*
 *நியாயம் நிலைநாட்டப்பட்டது.*

👍👍👍👍👍👍👍👍👍👍👍

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டாரத்தில் கணித பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு முன்னுரிமை
பட்டியலில்  திடீரென்று ஏற்படுத்தப்பட்ட குளறுபடிகளை களைந்து நியாயமாக வழங்கப்பட வேண்டிய பதவி உயர்வை வழங்கிட வேண்டும் என  11/6/2018 அன்று *சத்தியமங்கலம் வட்டார SSTA* சார்பில் உள்ளிருப்பு போராட்டம் மாநில பொறுப்பாளர்கள் ஆலோசனை பெற்று நடத்தப்பட்டது.
 நமது கோரிக்கையின் நியாயம் உணர்ந்த அடுத்தவொரு இயக்க பொறுப்பாளர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர். நள்ளிரவில் மாவட்டக்கல்வி அலுவலரின் ஆணைக்கிணங்க வட்டாரக் கல்வி அலுவலர் நேரடியாக வந்து பேசி மறுநாள் 12/6/18 அன்று முதன்மைக்கல்வி அலுவலகத்தில் விசாரித்து பிரச்சனை சரிசெய்யப்படும் என்ற உறுதியின் பேரில் *SSTA பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள்* உள்ளிருப்பு போராட்டத்தை அதிகாலை சுமார் 1 மணியளவில் முடித்து வீடு திரும்பினர்.

✅✅✅✅✅✅✅✅✅✅✅

12/6/18 அன்று காலை *SSTA மாநில பொதுச்செயலாளர் திரு .இராபர்ட்* அவர்கள் வழிகாட்டுதலின்படி *மாநில துணைச் செயலாளர் திரு. வேல்முருகன்* ,  மாநில,  மாவட்ட மற்றும் வட்டார பொறுப்பாளர்கள் ஈரோட்டில் கலந்தாய்வு மையத்தில் இருந்த மாவட்டக்கல்வி அலுவலரிடம் நமது நியாயமான கோரிக்கை பற்றி விரிவாக விளக்கப்பட்டது. பின்னர் *மாநில பொதுச்செயலாளர் திரு. இராபர்ட்* அவர்களும் நமது நியாயமான கோரிக்கையையும்,  அதை  நிறைவேற்ற வேண்டிய சாத்தியக் கூறுகளைப் பற்றியும் விதிகளை விளக்கி *மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடமும் (CEO ),சென்னையில் இருந்த தொடக்கக்கல்வி இணைஇயக்குநரிடமும் (JD ) அவர்களிடமும் முறையாக தொலைபேசியில் வாயிலாக தெரிவித்து நமது கோரிக்கைக்கு வலு சேர்த்தார்.*

📱📱📱📱📱📱📱📱📱📱📱
பாதிக்கப்பட்ட இருவரையும் அழைத்து அனைத்து விபரங்களையும் கேட்டு நமது தரப்பில் உள்ள நியாயத்தை புரிந்து கொண்டு முதன்மைக்கல்வி அலுவலர் நமது உறுப்பினருக்கு கணித பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க உத்தரவிட்டார்.
👍🤝👍🤝👍🤝👍🤝👍🤝

இன்று 13/6/18 மாலை மாவட்டக் கல்வி அலுவலர் அவர்கள் நமது *SSTA* உறுப்பினர் *திரு. தெய்வப்பால்* அவர்களுக்கு கணிதப்பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு ஆணை வழங்கினார்.
💪💪💪💪💪💪💪💪💪💪

 *SSTA* என்றுமே நமது நியாயமான கோரிக்கையின் 100% வெற்றியை உறுப்பினர்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுகிறது. .

🏆🥇🏆🥇🏆🥇🏆🥇🏆🥇🏆

  இவர்களால் பிரச்சனை தீர்க்கப்படுமா...? என்றெல்லாம் ஏளனமாக  பார்க்கப்பட்டவர்கள் மத்தியில் நமது உறுப்பினர் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு இன்று சத்தியமங்கலத்தில் *SSTA* மீண்டும் ஒருமுறை தனது சாதனையை நிருபித்துள்ளது. நாம் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. ..
நமது உரிமையை எவர் தடுத்தாலும் வென்று காட்டாமல் ஓயாத கூட்டம் நாம் *(SSTA*) என்பதை இன்று மீண்டும் பறை சாற்றியுள்ளோம்...

இந்த சிறப்பான வெற்றியினை  பெற காரணமாக இருந்த *SSTA மாநில பொதுச்செயலாளர் திரு. இராபர்ட்* அவர்களுக்கும் மற்றும் *மாநில நிர்வாகிகளுக்கும்,*  *மாவட்ட பொறுப்பாளர்களுக்கும்* & வட்டார ஆசிரியர்களுக்கும் *SSTA சத்தியமங்கலம் வட்டார கிளையின்* சார்பில் மனமார்ந்த நன்றிகள். 💐💐💐💐

🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹

 *இப்படை தோற்கின் எப்படை வெல்லும். ..*

🤺🤺🤺🤺🤺🤺🤺🤺🤺🤺🤺

No comments:

Post a Comment