Monday, 18 June 2018

வேலைவாய்ப்பு: விமான நிறுவனத்தில் பணி!


ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் (ஃபயர் சர்வீஸ்), முதுநிலை உதவியாளர் (எலெக்ட்ரானிக்ஸ்) பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 186

வயது வரம்பு: 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும் அல்லது டிப்ளோமா படிப்பை எலெக்ட்ரானிக்ஸ், தொலைத் தொடர்பு ஆகிய துறைகளில் படித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனை, உடற்தகுதி தேர்வு, போன்ற முறைகளில் தேர்ச்சி நடைபெறும்.

கட்டணம்: ரூ.1,000/- எஸ்சி/எஸ்டி, பெண்களுக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடைசி தேதி: 15-07-2018

மேலும் விவரங்களுக்கு https://www.aai.aero/en/careers/recruitment என்ற லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment