Friday, 8 June 2018

மருத்துவர் பணியில் இல்லாததால் மாணவி மரணம்!

விருத்தாசலம் அருகே அரசு ஆரம்ப சுகாதார
நிலையத்தில் மருத்துவர் இல்லாத காரணத்தால், பள்ளி மாணவி உயிரிழந்ததாகக் குற்றம்சாட்டி, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள சு.கினனூர் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரின் மகள் மகாலட்சுமி (வயது 13). இவர் கம்மாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்துவந்தார். கோடை விடுமுறை முடிந்து தற்போது பள்ளிகள் செயல்பட்டுகொண்டிருக்கின்றன. வீட்டிலிருந்து இன்று (ஜூன் 7) காலை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற மகாலட்சுமி, பள்ளியில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். அங்கிருந்த ஆசிரியர்கள் உடனே அவரை மீட்டு, கம்மாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டுசென்றனர்.

மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால், மாணவிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. அதனால் சுமார் 30 நிமிடங்களாக உயிருக்குப் போராடிய மகாலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்களும், பொதுமக்களும் முறையாகப் பணிக்கு வராத மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் நியமிக்கக் கோரியும் சிதம்பரம் - விருத்தாசலம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment