Saturday, 9 June 2018

வேலைவாய்ப்பு: கிராமிய வங்கிகளில் பணி


நாடு முழுவதும் உள்ள 56 மண்டல கிராமிய வங்கிகளில் காலியாக உள்ள ஆபீஸர் ஸ்கேல் I, II மற்றும் III, அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு வங்கிகள் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 10,190

கல்வித் தகுதி: அதிகாரி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இளங்கலை பட்டமும், அலுவலக உதவியாளர் பணிக்கு ஏதாவதொரு துறையில் பட்டம், உள்ளூர் மொழி அறிவு மற்றும் கணினிப் பணி செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: அலுவலக உதவியாளர் பணிக்கு மாதம் ரூ.19,000 - 22,000/-

ஆபீஸர் ஸ்கேல் - I பணிக்கு மாதம் ரூ.30,000 – 36,000/-

ஆபீஸர் ஸ்கேல் - II பணிக்கு மாதம் ரூ.36,000 – 42,000/-

ஆபீஸர் ஸ்கேல் - III பணிக்கு மாதம் ரூ.41,000 – 47,000/-

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு ரூ.100/-.

கடைசித் தேதி: 02.07.2018

மேலும் விவரங்களுக்கு
http://www.ibpsஅல்லது (http://www.ibps.in/wp-content/uploads/DetailAdvtCRPRRBVII.pdf) என்ற இணையதள லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment