Wednesday, 13 June 2018

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாகும் என தகவல்?

தமிழக சட்டமன்றத்தில் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை தீர்வு அளிக்கப்படும்  என எதிர்பார்க்கப்படுகிறது. எம்எல்ஏ டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கதமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து  சபாநாயகர் தனபால்
உத்தரவிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தனிநீதிபதி துரைசாமி 18  தொகுதிகளிலும் தேர்தல் நடத்த தடைவிதித்து உத்தரவிட்டார்.*

*மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இதன் பிரசான வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா  பனர்ஜி மற்றும் சுந்தர் அடங்கிய அமர்வு வழக்கின் விசாரணையை முடித்து தீர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில் நீதிபதி சுந்தர்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகளை விசாரித்து வருகிறார். இதனையடுத்து நீதிபதி சுந்தர் நாளை சென்னை வர உள்ளதாக கூறப்படுகிறது. எனவே 18  எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கு மற்றும் உள்ளாட்சி தேர்தல் வழக்கு உள்ளிட்ட வழக்குகளிலும் நாளை தீர்ப்பு வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.*

*இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாக வாய்ப்பு உள்ளது. 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கு தமிழக அரசியலில் திருப்பத்தை  ஏற்படுத்தும் என்பதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

No comments:

Post a Comment