Wednesday, 6 June 2018

அரசின் சிறப்பு பயிற்சியில் பங்கேற்ற 1,337 பேர், 'நீட்' தேர்வில் தேர்ச்சி

'நீட்' நுழைவு தேர்வுக்காக, தமிழக அரசு நடத்திய சிறப்பு
பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களில், 1,337 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவர்களில் பலர், 400க்கு மேலான மதிப்பெண் பெற்றுள்ளனர்.நாடு முழுவதும், நீட் நுழைவு தேர்வு, மே, 6ல் நடந்தது. இந்த தேர்வில், 12.69 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழகத்தில், 1.14 லட்சம் பேர், நீட் தேர்வை எழுதினர். அவர்களில், 45 ஆயிரத்து, 335 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், 3,300 பேருக்கு, தமிழக அரசு சார்பில், சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி பெற்றவர்களில், 1,337 பேர், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக, தமிழக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்ச்சி பெற்றவர்களில் பலர், 400க்கு மேலான மதிப்பெண் பெற்றுள்ளனர். மாவட்ட வாரியான தேர்ச்சியில், திருநெல்வேலி முதலிடம் பிடித்துள்ளது. அங்கு, 195 பேர், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கன்னியாகுமரி, 173; நாகை, 85; சேலம், 77; விருதுநகர், 70; சிவகங்கை, 65; திண்டுக்கல், 55, கோவை, 52; திருப்பூர், 50; புதுக்கோட்டை, 49; ஈரோடு, 45; துாத்துக்குடி, 43; கிருஷ்ணகிரி, 40; வேலுார், 31; சென்னை, மதுரை, 30 மற்றும் காஞ்சிபுரத்தில், 29 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.நாமக்கல், 24; திருச்சி, பெரம்பலுார், 23; ராமநாதபுரம், 20; திருவாரூர், 19; கரூர், 17; திருவண்ணாமலை, 15; தேனி, 13; கடலுார், தர்மபுரி, 11.மேலும், தஞ்சாவூர், அரியலுார், திருவள்ளூர், தலா, 10; விழுப்புரத்தில், ஒன்பது மற்றும் நீலகிரி மாவட்டத்தில், மூன்று மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.தேர்ச்சி பெற்ற மாணவர்களில், 821 பேர் அரசு பள்ளி மாணவர்கள், மற்ற, 516 பேர், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்தவர்கள்.

No comments:

Post a Comment