Monday, 7 May 2018

தமிழக அரசின் செய்தி அறிக்கைக்கு SSTA மாநில தலைமையின் மறுப்பு அறிக்கை

🏛🏛🏛🏛🏛🏛🏛🏛🏛
*தமிழக அரசின் செய்தி அறிக்கைக்கு SSTA மாநில
தலைமையின் மறுப்பு அறிக்கை*
🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்று தமிழக அரசு  செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது முற்றிலும் தவறான செய்தி அறிக்கை*
_ஏனெனில் இவையனைத்தும் ஒரு குறிப்பிட்ட பணியில் இருந்து ஓய்வு பெறும் நிலையில் உள்ள அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு  வழங்கப்படுகின்ற உச்சபட்ச ஊதியமா கூட இருக்குமா?? என்றசந்தேகம் எழுகின்றது._

*இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இடைநிலை ஆசிரியர்களுக்கு ௹37, 175 லிருந்து ௹ 48,423 ஆக ஊதிய உயர்வு கொடுக்கப்பட்டு ௹11, 248 அதிகமாக வழங்கப்படுவதாக மிக மிக மிக தவறான செய்தியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது*

_இச்செய்தி முற்றிலும் தவறானது.. வன்மையாக கண்டிக்க தக்கது_
⁉⁉⁉⁉⁉⁉

*2009 க்கு பிறகு பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் 9 ஆண்டுகள் பணி முடித்த நிலையில் பெறும் மொத்த ஊதியம் ௹27, 000 மட்டுமே.. என்பதை நாங்கள் இங்கே பதிவு செய்கிறோம்!!*

_புதிதாக நியமனம் பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ௫20,600 மட்டுமே அடிப்படை ஊதியமாக⁉⁉⁉⁉ நிர்ணயிக்கப்பட்டு உள்ளதை நாங்கள் சுட்டிக் காட்ட விரும்புகிறோம் ,தவறான செய்திகளை பொதுமக்களிடம் பரப்பும் எண்ணத்தை கைவிடுங்கள் இதுபோன்று செய்வதால் அது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிடும்!!_

*தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை தமிழக மக்கள் மனதை அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிரான தவறான கண்ணோட்டம் உண்டாக்கும் ஒரு தந்திரம்!! என்பதை நாங்கள் சொல்லி யாருக்கும் தெரிய வேண்டியது இல்லை!!*

*_அம்மாவின் வழியில் ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்லி ஆட்சி நடத்தும்  ஆட்சியாளர் களுக்கு இது அறிவார்ந்த மற்றும் அழகான செயல் அல்ல!!_*

*மேலும் 70% வரி வருவாய் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு செலவு செய்வதான அறிக்கை முற்றிலும் ஏற்புடைய தல்ல ,அதில் தான் MINISTERS,MLA ஊதியமும் அடங்கும் !!*
*தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவர்கள் குடும்பத்திற்கு செலவிடுவது மட்டும் அல்லாமல்.. GST, VAT, IT, CESS, TRANSPORT போன்ற வழிகளில் மீண்டும் அரசுக்கே வரியாக கொடுக்கிறார்கள்...அவர்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்காமல் நிறுத்தி பாருங்கள்... தமிழக அரசு பொருளாதார நிலை எப்படி பின் தங்குகிறது என்று*👉

_மேலும் இந்தியாவிலேயே மிக அதிக வருமானம் உள்ள மாநிலங்களில் ஒன்றாக தமிழக அரசு திகழ்கிறது என்று மத்திய அரசு அறிக்கை ஒன்றை சமீபத்தில் தாக்கல் செய்ததை தங்கள் சமூகத்திற்கு நினைவூட்டுகிறோம்._

*தற்போது தமிழக அரசு ஜாக்டோ-ஜியோ மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளை கைது செய்து வருவது மிகவும் கண்டிக்கத்தக்க மற்றும் வருந்தத்தக்க செயல் ஆகும்!!*

1⃣ *CPS எனும் கொடிய அரக்கனால் 5 லட்சம் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்படும் வாழ்வாதார பாதிப்பை நீக்க கோரும் நியாயமான கோரிக்கை.. இதை அவர்கள் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக அரசுக்கு கோரிக்கை விடுத்து பல கட்ட போராட்டங்களை ஏற்கனவே செய்து, அரசு செவி சாய்க்காத சூழலில் தற்போது கோட்டை முற்றுகை போராட்டம் செய்து வருகின்றனர்*
💪💪💪💪💪
_தமிழக அரசு முன்னாள் முதல்வர் அம்மா அவர்கள் சட்டப்பேரவையில் 110 விதிகள் படி CPS ரத்து செய்ய குழு அமைத்து உத்தரவிட்டார்கள்!! மாண்புமிகு. துணை முதல்வர் அவர்களும் இக்கருத்தை வலியுறுத்தி உத்திரவாதம் கொடுத்தார்கள்_

*ஆனால் CPS களைய அமல்படுத்த ப்பட்ட குழுவானது 8 முறை 🔃 கால நீட்டிப்பு செய்யப்பட்டு, உயர்நீதிமன்றம் நவம்பர் -30 2017 க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியும் கூட,தற்போது வரை ஒரு அறிக்கை கூட தாக்கல் செய்யாதது மிக மிக கண்டிக்கத்தக்க செயலே ஆகும்!!*

_இந்த பிரதான கோரிக்கைகளை வலியுறுத்தி JACTO- GEO செய்து வரும் போராட்டங்களை முடக்கும் வகையில் மாநில, மாவட்டம் நிர்வாகிகளை கைது செய்திருப்பது தமிழக அரசின் தவறான அணுகுமுறை ஆகும்_


*இந்த கைது நிலைப்பாடு போராட்ட களத்தில் இல்லாத 8 லட்சம் அரசூழியர்கள், ஆசிரியர்கள், மற்றும் 7 லட்சம் ஓய்வூதியதாரர்களை  போராட்டம் செய்ய  தூண்டும் செயல் ஆகும்!!*

*_ஏற்கனவே தமிழக அரசு இதே போன்ற ஒரு அடக்கு முறையை 2003 ல் கையாண்ட நிலையில் அடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களில் தோல்வி அடைந்ததை நாங்கள் தமிழக அரசுக்கு மீண்டும் நினைவூட்ட விரும்புகிறோம்_!*

👨🏻‍✈👨🏻‍✈👨🏻‍✈ *காவல்துறை அதிகாரிகளே!!  உங்களுக்கும் சேர்த்தே ஜாக்டோ-ஜியோ போராட்டம் செய்து வருகிறது.. சிறையில் அவர்களை கருணையோடு கண்ணியமான முறையில் நடத்த வேண்டும்*


*தமிழக அரசு ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சிறையிருப்பிலிருந்து விடுவித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பதுதான் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுடைய உயரிய எண்ணமாகும்!!*

✍🏼✍🏼✍🏼✍🏼✍🏼✍🏼✍🏼✍🏼✍🏼
*இவண்*
*ஜே.ராபர்ட்*
*மாநில பொதுச்செயலாளர்*
*இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் SSTA*

No comments:

Post a Comment