Thursday, 10 May 2018

வேலைவாய்ப்பை வாரி வழங்கிய ஏப்ரல்!!!


ஆன்லைன் வாயிலாகப் பணியமர்த்தும் நடவடிக்கை சென்ற ஏப்ரல் மாதத்தில் 21 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது.

ஆன்லைன் வேலைவாய்ப்புத் தளமான நவ்கரி.காம் ஒவ்வொரு மாதமும் ஆன்லைன் வாயிலாகப் பணியமர்த்தும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வு விவரங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஏப்ரல் மாதத்துக்கான வேலைவாய்ப்பு அறிக்கையில், நவ்கரி வேலை தேடும் குறியீடு 2,139 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது 2017ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தை விட 21 சதவிகித வளர்ச்சியாகும். அதிகபட்சமாக ஆட்டோமொபைல் துறையில் 44 சதவிகித வளர்ச்சியும், கட்டுமானம் மற்றும் பொறியியல் துறையில் 34 சதவிகித வளர்ச்சியும், வங்கி மற்றும் நிதிச் சேவைகள் பிரிவில் 34 சதவிகித வளர்ச்சியும், தகவல் தொழில்நுட்பத் துறையில் 20 சதவிகித வளர்ச்சியும் கிட்டியுள்ளது.

நகர வாரியாகப் பார்த்தோமேயானால், சென்னை, டெல்லி, பெங்களூரு மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் முறையே 25%, 24%, 17% மற்றும் 17 சதவிகிதம் கூடுதலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. பணியாளர்களின் அனுபவ ரீதியாகப் பார்த்தால், துவக்க நிலை முதல் 3 ஆண்டுகள் வரையில் அனுபவம் கொண்ட பணியாளர்களுக்கான தேவை 6 சதவிகிதமும், 4 முதல் 7 வருட அனுபவம் கொண்ட பணியாளர்களுக்கான தேவை 4 சதவிகிதமும், 8 முதல் 12 வருட அனுபவம் கொண்டவர்களுக்கான தேவை 1 சதவிகிதமும், 13 முதல் 16 வருட அனுபவம் கொண்டவர்களுக்கான தேவை 6 சதவிகிதமும் உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment