Friday, 11 May 2018

விண்ணப்பப் படிவத்துடன் ரூபாய் நோட்டுகள்!


ஹைதராபாத்தில் சாலைப் போக்குவரத்து ஆணையம் (ஆர்டிஓ) அலுவலகத்துடன் தொடர்புடைய விண்ணப்பங்களுடன் ரூபாய் நோட்டுகளையும் சேர்த்து சமர்ப்பிக்கப்பட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

ஹைதராபாத்தில் பட்டான்சேரு ஆர்டிஓ அலுவலகத்தில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களுடன் லஞ்சப் பணத்தையும் உடன்வைத்து சமர்ப்பித்தது போன்று ஒரு புகைப்படம் வெளியிடப்படப்பட்டுள்ளது. ஆனால், இது பட்டான்சேரு ஆர்டிஓ அலுவலகத்தில் எடுக்கப்படவில்லை என மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் இந்தப் புகைப்படம் பட்டான்சேரு அலுவலக வளாகத்தில் அந்தப் படங்கள் எடுக்கப்படவில்லை என்றும், ஏஜெண்டுகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டைதான் இதற்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை (மே 9) ஸ்ரீனிவாஸ் என்பவர் ட்விட்டரில் ட்வீட் செய்திருந்தார். அதில், “என் ஃபேஸ்புக் டைம்லைனில் யாரோ ஒருவர் பட்டான்சேரு ஆர்டிஓ அலுவலகத்தின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஓட்டுநர் உரிமம், புதிய வாகனப் பதிவு, புதுப்பித்தல் ஆகியவற்றுகு விரைவில் ஒப்புதல் பெற புகைப்படத்தில் உள்ளதைப் போன்று செய்யலாம். இடைத்தரகர்களின் கூட்டு முயற்சி” என எழுதியிருந்ததாகக் கூறினார்.

இதையடுத்து நடத்திய விசாரணையில், இந்தப் புகைப்படம் அலுவலகத்திற்குள் எடுக்கப்படவில்லை; புகைப்படத்தின் பின்னணியும் பட்டான்சேரு அலுவலகம் கிடையாது; முகவர்கள் இடையே ஏற்பட்ட சண்டையால் இது வந்தது என மூத்த அதிகாரி ஒருவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment