Thursday, 3 May 2018

இதயநோய்களை வைட்டமின் டி குறைக்கும்!


இதயநோய் உள்ளவர்கள் வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஆரம்பக் காலத்திலேயே இதயநோய்களையும் அதன் தொடர்ச்சியாக இறப்பு விகிதத்தையும் கணிசமாகக் குறைக்க முடியும் என்று சமீபத்தில் வெளியான ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதயநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம், இந்நோயால் ஏற்படக்கூடிய 30 சதவிகித விளைவுகளைக் குறைக்க முடியும்.

நார்வே பெர்கன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான ஜட்டு டிர்கஸ், “வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுகளைச் சரியான அளவில் எடுத்துக்கொண்டால், ஆரம்பக் கால இறப்புகள் கணிசமாக குறைகிறது என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். மேலும் வைட்டமின் டி சத்து நிறைந்துள்ள உணவுகளை அதிகமாகவோ அல்லது குறைவாக எடுத்துக்கொண்டால் ஆபத்து அதிகரிக்கும் அபாயம் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

வைட்டமின் டி குறித்த ஆய்வுக்கு 2000ஆம் ஆண்டு முதல் 12 ஆண்டுகள் வரை இதயநோயால் பாதிக்கப்பட்ட 4,000 நோயாளிகளை ஆராய்ச்சியாளர்கள் சோதனைக்குட்படுத்தி வந்தனர். இந்த ஆய்வில் ஈடுபட்டவர்களின் சராசரி வயது 62 ஆகும்.

இது தொடர்பாக, தி ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் எண்டோகிரினாலஜி & மெட்டாபாலிசத்தில் வெளியிடப்பட்ட ஆய்வானது, ரத்தத்தின் லிட்டர் ஒன்றுக்கு 42 முதல் 100 வரையிலான நானோக்களைக் (புரதச் சத்துக்கள் - nmol / l) கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் அது ஆரோக்கியமாக இருப்பதாகும். இந்த அளவுக்கு அதிகமான அல்லது குறைவான நானோக்கள் இருந்தால், இதயநோயால் இறக்கும் அபாயம் அதிகமாக உள்ளது.

பொதுவாக வைட்டமின் டி சத்து உணவுகளை ஒருவர் எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் கூறுவது கடினம். ஏனென்றால் வைட்டமின் டி சத்து ஒருவருக்கொருவர் மாறுபடும். நீங்கள் எங்கு வாழ்கிறீர்கள், என்ன வகையான உணவுகளை எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்து மாறுபடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment