Sunday, 6 May 2018

பொதுவுடைமை கட்சியை அடிப்படையாக கொண்ட "என் மூத்த இயக்கமே"....

*உங்களுடைய போராட்ட குணமும் போராட்ட வரலாறும் இந்த உலகம் அறிந்ததே!!*


_அதிலும் தமிழக ஆசிரியர்கள் நன்றாகவே அறிவார்கள்..._

*ஒட்டு மொத்த தமிழகத்தையே அதிர வைத்து  இரும்புக் கோட்டையாக நான்கு நாட்கள் உச்சகட்டமாக கொளுத்தும் வெயிலிலேயே, குடும்பத்துடனும்  குழந்தைகளுடனும் , நோய் நொடிகள் உள்ளவர்களுடனும் உயிர் துறப்பினும் "சமவேலைக்கு சமஊதியம் " என்னும் உரிமையை பெற போராட்டத்தை நடத்தினோம்.. அப்பொழுது போராட்டத்தின் வலிமை கண்டு மாண்புமிகு எதிர்கட்சி தலைவர் முதற்கொண்டு பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் எங்கள்  கோரிக்கையில் உள்ள நியாயங்களை உணர்ந்து நேரடியாகவும் தொலைபேசி வாயிலாகவும் ஆதரவு அளித்தனர்.. நமது அரசு ஊழியர் சங்கங்களும், பல ஆசிரியர் அமைப்புகளும் கூட தமது சார்பாக மாவட்டச் செயலாளர்களை அனுப்பியும், தொலைபேசி மூலம் பேசியும் தங்களது ஆதரவை அளித்தனர்..*
*அப்பொழுதெல்லாம் நீங்கள் செய்தி அறியாமல் வெளிநாட்டில் ..?? அல்லது வெளிமாநிலத்தில் இருந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.. போராட்டத்தை முடித்து மூன்று நாட்கள் கழித்து போராட்டத்தை தமிழகமே திரும்பி பார்த்த பிறகு தாங்கள் அறிக்கை அளித்ததற்கு ஆசிரிய குடும்பத்தின் சார்பாகவும் போராட்ட குழுவின் சார்பாகவும் மனதார நன்றி கூறி வாழ்த்தி  வரவேற்கிறேன்..*

_உங்களுடைய ஆதரவு இன்று போல் என்றென்றும் எங்களுக்கும் எங்கள் போராட்டக்குழு ஆசிரியர்களுக்கும் தேவை... தமிழ்நாட்டில் மட்டும் அல்ல இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த இந்த போராட்டம் முழுவதுமாக வெற்றி அடைந்துவிட்டதாகவே நாங்கள் உணர்கிறோம்.. இருந்தாலும் இந்த நேரத்தில் சில சந்தேகங்களை மிக நேர்த்தியாக சில  கருத்துகளை தெரிவித்துள்ளீர்கள்... உங்களது கருத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டிய கடமை இந்த நேரத்தில் எங்களுக்கு உள்ளது.._

*நீங்கள்  குறிப்பிட்டுள்ள சில கேள்விகளுக்கு நாங்கள் பதில் அளிக்கிறோம்..*

*2016 உயிர் துறக்கும் போராட்டத்தினை தொடக்க கல்வி இயக்குநர் மீது நம்பிக்கை வைத்து ஏன் கைவிட்டீர்கள் என குறிப்பிட்டுள்ளீர்கள்..*

_ஆம் இதை விட மிகமிக குறைவான எண்ணிக்கையில் யாருடைய பின்புலமும் இல்லாமல், எந்த அரசியல் கட்சியின் ஆதரவும் இல்லாமல் என்இனம் 7 ஆவது ஊதியக் குழுவில் அழியக் கூடாது என்பதை முன் கூட்டியே அறிந்து இந்தியாவின் 👸🏻இரும்பு பெண்மணியை👸🏻 எதிர்த்து 8 நாட்கள் உயிர் துறக்கும் போராட்டம் மேற்கொண்டோம்.. முடியவே முடியாது என்ற அரசிடம் 1 இலட்சம் பேரை திரட்டிக்காட்டி ஒன்றுமே செய்ய முடியாது என திரும்பிய நண்பர்களுக்கு *மத்தியில் சிறு கூட்டத்தை கொண்டே அரசிடம் எழுத்துப் பூர்வமான உத்திரவாத கடிதத்தினை பெற்ற பின்னரே போராட்டத்தை வாபஸ் வாங்கினோம்...* இன்றைக்கு அந்த உத்திரவாத கடிதத்திற்கு அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் மற்றும் அரசு வழக்கறிஞர் என அனைவரும் வாயடைத்து பதில் சொல்ல முடியாமல் நின்று விட்டார்கள் என்பதை நினைவுகூறுகிறோம்._

*சட்டப் போராட்டத்தின் படி நீதியரசர்கள் வழங்கிய  இடைக்கால உத்தரவில் "இந்த எழுத்துப் பூர்வமான உத்தரவை தாண்டி அரசால் வேறு எதுவும் செய்ய முடியாது..." என இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.. சந்தேகம் இருந்தால் நீதிமன்ற இடைக்கால ஆணையை இணையத்தில் அனுப்புகிறோம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். போராட்டத்தில் இருந்து திடீரென மாறி நீதிமன்றம் மூலம் தீர்வு காண முடியும் என்ற நிலைப்பாட்டிற்கு சென்றுவிட்டதாக கூறியுள்ளீர்கள்...*

*_ஆம் நாங்கள் அரசிடம் எங்கள் கோரிக்கை வெல்ல இன்னும் எத்தனை வழிகள் இருந்தாலும் அத்தனை வழிகளிலும் போராடுவோம்.* முடிந்தால் இன்னும் பல வழிகளை கண்டறிந்து அவற்றிலும் போராடுவோம்.._

*எங்களது ஒரே நோக்கம் இடைநிலை ஆசிரியர்களாகிய என் இனம் அழியக் கூடாது ...*

*எங்கள் உயிர்💪💪 இருக்கும் வரை அழியவும் அழித்திடவும் விட மாட்டோம்.*

_ஜேக்டோ ஜியோவில் இருந்து விலகி  தனி வழக்கு போட்டு ஒரு சில நாட்களில் தீர்ப்பு வந்து விடும் என கூறி ஆசிரியர்களிடம் வழக்கு நிதி வசூலிப்பதாக கூறியுள்ளீர்கள்.._

_ஆம்!!நண்பர்களே!!_

*-எங்களது ஆசிரிய பெருமக்கள் வழக்கு தொடுக்க தாமாகவே முன் வந்து வழக்கு நிதி அளித்தார்கள்.💵👨🏻‍🎓அந்த வழக்கு நிதி அளித்தவர்கள் விபரம், செலவு செய்யப்பட்ட விபரம்,மீதமுள்ள தொகை என அனைத்தும் ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல தமிழகத்திலுள்ள அத்தனை பேருக்கும் தெரியும் வண்ணம் எந்த இயக்கமும் செய்திராத வண்ணம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது...முடிந்தால் அவற்றில் தவறு கண்டுபிடியுங்கள்..-*

_உங்களைப் போல்_ _நின்றால் நிதி,_💵
_நடந்தால் நிதி,_💵
_கூடினால் நிதி,_💵
_கலைந்தால் நிதி_💵

*என பெற்றுக் கொண்டு ஒரு முறை கூட நிதி அளித்த கடைநிலை ஆசிரியருக்கு விளக்கம் கொடுத்ததில்லை...*

*ஆனால் நாங்கள் அனைத்து நிதிசார்ந்த நடவடிக்கைகளை  இணையத்தில்  வெளியிடாமல் இருந்ததில்லை என்பதை நாங்கள் நினைவு கூறுகிறோம்..*

*ஜேக்டோ ஜியோவில் இருந்து கொண்டே தனி வழக்கு போடுவதாக...  எங்களை ஜேக்டோ ஜியோவில் இருந்தும் வெளியேற்ற நிர்பந்தித்தீர்கள்..*

*ஆம் நண்பர்களே ஜேக்டோ ஜியோவில் எதற்காக இணைந்தோம் இரண்டே இரண்டு கோரிக்கைக்காக இணைந்தோம்..*
*1⃣ 7 ஆவது ஊதிய குழுவை  அமுல்படுத்த  வேண்டும்.*
*2⃣ CPS ஐ  ரத்து செய்ய வேண்டும்..*

*ஆனால் 7 ஆவது ஊதியக்குழுவில் முரண்பட்ட ஊதியத்தோடு அமுல்படுத்தப்பட்டதை கண்டித்து இந்த இடைநிலை ஆசிரியர்களுக்காக உரக்க குரல் கொடுப்பது இந்த போராட்டக் குழு மட்டும் தானே.. என்பதால் இன்றைக்கும் ஒரு சில கருத்துகளை முன் வைக்க விழைகிறேன்..*

_தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனுபவித்து வரும் அனைத்து வித சலுகைகளும் போராட்டத்தின் மூலம் பெற்றதை நான் அறிவேன்.._
ஏனெனில்_
*என் தலைமுறையே ஆசிரிய பரம்பரையே.. அன்றைக்கு சுயநலமில்லாமல் பல இன்னுயிர்களை துறந்து சிறைவாசம் அனுபவித்து 41 வருடங்கள் கழித்து மத்திய அரசுக்கு இணையான அனைத்து சலுகைகளையும் பெற்றோம்... அப்பொழுதும் சரி இப்பொழுதும் சரி 7வது ஊதிய போராட்டத்திலும் சரி என் இனம் ஒரு அடி கூட பின்வாங்கியது கிடையாது... இதுவரை ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் அனுபவிக்கின்ற அத்தனை சலுகைகளுக்கும் அடித்தளமாக விளங்குவது என் இடைநிலை ஆசிரியர்கள் இன மக்களின் போராட்டமே...*
*இதை நீங்கள் இல்லை, வேறு எவராலும் மறுக்கவும் முடியாது.. மறைக்கவும் முடியாது..*

_ஆனால் இன்று அதே இனம் 6 ஆவது ஊதியக் குழுவில் 🚨⁉துப்புரவு பணியாளர்களுக்கு⁉🚨 இணையான அடிப்படை ஊதியத்தை நிர்ணயித்த போது ஒட்டுமொத்த ஆசிரியர்களும் ஊதிய குழுவை வேண்டாம் என போராடி இருந்தால் 9 ஆண்டுகளாக தொடர்ந்திருக்குமா இப்பிரச்சனை?.. இத்தனை வேதனைகள் இருந்திருக்குமா?.. இந்தியாவிலேயே எந்த ஒரு மாநிலத்திலும் இப்படி ஒரு கேவலமான ஊதியத்தை வழங்கி வருகிறார்களா....? என்பதை இன்னும் அறியாமல் இருப்பது எங்களுக்கு வியப்பாகவே உள்ளது.._


*அரசாணை எண் 234 ,விதி 9 ன் படி 01.01.2006 பின்  நியமிக்கப்படுகிற அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கு எப்படி ஊதிய நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது..  அதன்படி பார்த்தால் இடைநிலை ஆசிரியர்களுக்கு 4500+2250+1620 என குறைந்த பட்ச அடிப்படை ஊதியத்தை நிர்ணயம் செய்திருந்தார்கள்.... எப்படி அடிப்படை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது தெரியாமல் இத்தனை ஆண்டுகள்    இருந்துவிட்டு போராடுபவர்கள்,  போராடுபவர்களை ஊக்கப்படுத்தாமல் போராடுவது தவறு என சுட்டிக் காட்டி உள்ளீர்கள்....!*  
*அதை நினைத்து வருந்துகிறோம்..*

*இன்றைக்கு கடைநிலை ஊழியர்கள் வாங்கும் ஊதியத்தை கூட இடைநிலை ஆசிரியர்கள் பெற முடியாமல் உள்ளனர். ஒரு நபர் ஊதிய குழுவில் நம்மை விட கல்வித் தகுதியில் பின் தங்கி உள்ளவர்களுக்கு 36 பிரிவினருக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியமும் அதற்கு மேலும் வழங்கப்பட்டுள்ளது...அது குறித்து உங்களுக்கு தெரியுமா , தெரியவில்லையா?? என்பதை நான் அறியேன்..!! அதை உங்களிடமே விட்டுவிடுகிறேன்..*

*ஆனால்  ஒரு நபர் குழுவில் அதை  வைத்தாவது எட்டு ஆண்டுகளாக வாங்கித் தந்தீர்களா...?  அதையும் விட்டு விட்டீர்கள்.. அடுத்ததாக மூன்று நபர் குழு நம்மை விட கல்வித்தகுதியில் குறைவானவர்களுக்கு 24 பிரிவினருக்கு ஊதியத்தை மாற்றியமைத்தது ...  அப்பொழுதும் விட்டுவிட்டீர்கள்..  இன்னும் தெளிவாக சொல்லப்போனால் என்னுடைய இனத்திற்கான உரிமையை 04.01.2011 அன்று,  இன்றைக்கு வெறும் 500+ 250 ஐ மட்டும் இடைநிலை ஆசிரியர்களுக்கு கூடுதலாக பெற்று விட்டு "தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை 15,600+5400, சிறப்பு நிலைக்கு 15,600+5700" என்றும் "நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு தேர்வுநிலை 150600+5700, சிறப்புநிலை 15600+6600 "என்று அரசுடன் ஒப்பந்தம் செய்து அனைத்து ஆசிரிய இயக்கங்களின் ஒப்புதல் படி அரசு வெளியிட்ட கடிதம் பற்றி ஏன் மௌனியாக இருக்கிறீர்கள். ... வட்டாரம் முதல் மாநில பொறுப்புவரை உள்ள தலைமை ஆசிரியர்கள் பயன்பெற்றுவிட்டார்கள் இடைநிலை ஆசிரியர்களுக்கு. ....?,!!*
*வழக்கம்போல அல்வா..🍮*

      *இதுபற்றி எல்லாம் இன்னும் ஏன் எங்களுடன் பணிபுரியும்   இ(க)டைநிலை ஆசிரியர் சமுதாயத்துக்கு தெரிவிக்கவில்லை..? நாங்கள் அதற்கு உடன்படவில்லை என சொல்லி தப்பித்து கொள்ள பார்க்கிறீர்களா?..* *ஒரு தவறு நடந்தால் அந்த தவறை செய்தவர்கள் மட்டும் அல்ல அந்த தவறை வெளியில் சொல்லாமல்  இத்தனை காலம் அமைதி காத்து வருபவர்களும் அந்த தவறுக்கு உடன்பட்டவர்களே.. என் முன்னோர்  நூற்றுக் கணக்கானோர்  உயிரை துறந்த வரலாற்றை 04.01.2011 அன்று குழி  தோண்டி புதைத்து விட்டீர்கள். இன்னும் ஏன் மறைக்கிறீர்கள்.. உங்கள் பின்னால் உள்ளவர்கள் வெளியே சென்று விடுவார்கள் என்றா...? சந்தா தொகையை பெற முடியாது என்றா...?*
😨😨😨😨😨😨😨

*நீதி மன்றம் சொன்னாலும் அரசு தட்டி கழித்து விடும் என்ற வாதத்தினை  முன் வைத்து தானே...  சட்டப்போராட்டம் மற்றும் களப்போராட்டம் என ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு  என்று  கேட்கிறீர்கள்...?*
🤗🤗🤗🤗
*ஜேக்டோ ஜியோ அமைப்பை  பார்த்து  ஏன் நீங்கள் நீதிமன்றத்தை நாடவில்லை என்று நீதியரசர்கள் கேட்கவில்லையா?.*

*நாங்கள் நீதிமன்றத்தின்            ஒவ்வொரு விஷயத்தையும் முறைப்படி சட்டப்பூர்வமாகவும் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்தும்  செயல்படுகிறோம்.. எங்களுக்கு எந்த அரசியல் கட்சி, சாதிய பின்புலமும்  இல்லை.. பொருளாதார ரீதியாகவும் எங்களுக்கு எந்த வித வசதியும் இல்லை.. ஆனால் எங்களுக்குள் உள்ள  "பாதிக்கப்பட்டவர்" என்ற உணர்வே மேலொங்கி உள்ளது.. அதனாலேயே ஒருங்கிணைந்துள்ளோம். ஆனால் நான் குறிப்பிட்ட அத்தனை ஆதரவும் தங்களிடம் இருந்தும் 9 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்களுக்கு தொடர் தனித்த கோரிக்கை எடுத்து நடவடிக்கையில் ஏன் மத்திய அரசு ஊதியம் பெற்றுத்தரவில்லை..*

*எங்கள் இடைநிலை ஆசிரியர்கள் இனம் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கும், கொடி பிடிப்பதற்கும் , கூட்டம் சேர்ப்பதற்கு, கோஷம் போடுவதற்கு மட்டும் தானா?..*

 *நீங்கள் "ஒற்றைக் கோரிக்கையாக மத்திய அரசுக்கு இணையான" ஊதியம் என்பதை முன்னெடுத்து இருந்தால் நாங்களும் கட்டாயம் உங்கள் பின்னால் வந்து இருப்போம்.. ஏன் தோழரே இன்று வரை கூட 10,15 கோரிக்கைகளை அடுக்கி உள்ளீர்கள்...?? அதை பெற முடியாது என்று நினைக்கிறீர்களா?.. அல்லது நம்பிக்கை இன்மையால் போராட்டத்தை கையில் எடுக்கவில்லையா?.. 30 ரூபாய் மருத்துவ நிதி கூட்டிய பொழுது தனிப்போராட்டமாக இருந்த உங்களது சமுதாய போராட்டத்துக்கு வாழ்த்துக்கள் தோழரே...*
*ஆனால் ஏன் என் இனத்துக்காக ஒரு தொடர் போராட்டத்தை நீங்கள் கூறிய அந்த மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை கூட பெற்றுத் தருவோம் என்பதை ஏன் முன்னெடுக்கவில்லை....*
இன்னும் சொல்ல சொல்ல ஆயிரம் உண்டு... இருந்தாலும் சுருக்கமாக ஒரு சில விஷயங்களை மட்டுமே உங்களிடம் முன் வைக்கிறேன்..*

*ஜேக்டோ ஜியோவின் வலிமைக்கு குந்தகம் ஏற்படுத்துவதாக பதிவிட்டுள்ளீர்கள்..*

 *ஜேக்டோ ஜியோவின் கோரிக்கை CPS  என்பது மட்டுமே... என்னுடைய இனப் போராட்டம் முடிந்த பின்னர் இன்னும் இதைவிட பல மடங்கு வீரியமாக  CPS போராட்டத்தை கையில் எடுப்போம்.. மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை 8 ஆண்டுகளுக்கு  முன்னரே கோரிக்கை வைத்தும் கிடைக்கவில்லை..! நீங்கள் ஓர் பேரியக்கமாக இருந்தும்...அந்த ஒற்றைக் கோரிக்கையை மட்டும் வலியுறுத்தி அனைத்து ஆசிரிய இயக்கங்களையும் இணைத்து போராடினால் போராட்டம் வெற்றி என்றைக்கோ பெற்றிருக்கலாம்...  ஆனால் உங்களுக்கு இதை செய்ய ஏன் இன்னும் மனம் வரவில்லை? தோழரே..*
👺👺👺👺👺👺

 *இன்று "சமவேலைக்கு சம ஊதியம்" என்றும் போராட்டம் நடத்தினோம்.. அதிலும் உங்களுக்கு உடன்பாடில்லை...*

*ஒரு "ஓரே கல்வித்தகுதி" " ஓரே பணி" என பிரிவினர் 9 ஆண்டுகளாக சாப்பாட்டையாவது சாப்பிடுவார்கள் மற்றொரு பிரிவினர் பிரியாணி கிடைக்கும் வரை பட்டினி கிடந்து சாகவேண்டும் என்பது தான் உங்களின் கொள்கை என்றால் அதை கடுமையாகவே நான் எதிர்ப்பேன்*


 இந்த இழிச்சவாயன் இடைநிலை ஆசிரிய இனம் கடைசிவரை வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளிப் போட்டு.... குடும்பத்தோடு 6பேர் தற்கொலை செய்து வருகின்ற என் இனம் இன்னும் 9,10 ஊதிய குழு வந்தாலும் அதிக மாற்றம் வராமல்  இப்படியே தான் இருக்க வேண்டும் என்பது தான் உங்களது எண்ண ஓட்டமாக தெரிகிறது... அன்றைக்கு குறைந்த செலவு இருக்கும் போது மத்திய அரசுக்கு இணையான ஊதியம் பெறாமல் விட்டு விட்டீர்கள்... அன்று நிறைவேற்றி இருந்தால் ஆயிரக் கணக்கானோருக்கு கோடி கோடியாய் நிதிச்சுமை வந்து இருக்காது..... "சமவேலைக்கு சம ஊதியம்" என அடுத்த ஊதிய குழு வரை நீடித்தால் இன்னும் ஆயிரக்கணக்கான கோடி விரயமாகும் என இதையும் இனி பெறவே முடியாமல் அரசு புறக்கணித்து விடும்..*

*எனவே நாங்கள் எங்கள் "சமவேலைக்கு சமஊதியம்" வெற்றி பெற்ற உடன் ஜேக்டோ ஜியோ அமைப்புடன் இணைந்து CPS  என்ற அரக்கனை ஒழிக்க உச்சகட்டமாக களம் காண்போம்.. முடிந்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆசிரிய சங்கங்களும் ஒற்றுமையாய் இருந்து போராட முன் வாருங்கள்....அவ்வாறு இல்லாமல் உங்களை நம்பி மீதம் உள்ள 60 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களை ஏமாற்றாமல் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் பெற முடியாது என்ற உண்மைநிலையை கூறுங்கள்..🙂🙂🙂🙂 வரலாற்றை பேசாமல் வரலாற்றை உருவாக்க பாருங்கள். எங்கள் ஆதரவும் வாழ்த்தும் உங்களது போராட்டத்திற்கு எப்பொழுதும் உண்டு.. உங்களுடைய போராட்டம் பாதிக்கின்ற வகையில் அரசு நடவடிக்கை எடுத்தால் நாங்களும் களம் காண்கிறோம்.. நீங்கள் வேடிக்கை பார்த்தது போல் நாங்களும் வேடிக்கை பார்க்காமல் அரசுக்கு எதிரான முதல் குரல் உங்களுக்காக இருக்கும்..*

*போராடுவோம் வெற்றி பெறுவோம்....*

 *1.6.2009  பின் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள்  உங்களிடம் என்ன செய்தீர்கள்..? என கேட்பதாக கூறியுள்ளீர்கள் நானும் தான் உங்களிடம் கேட்கிறேன்..*

*மாவட்ட மாறுதல் கிடையாது என்றார்கள்.. அப்பொழுது 5 ஆண்டுகள் கழித்து தான் கிடைக்கும் என நீங்களும் கூறினீர்கள்.. 5 ஆண்டுகள் கழித்து கிடைத்து விடும் என்பதற்கு உங்களிடம் ஆதாரம்😡😡 உள்ளதா?..*

 *உச்சநீதிமன்றத்தில் SSTA தனித்து வழக்கு போடவில்லை எனில்  இன்று வரை யாராவது சொந்த மாவட்டத்திற்கு வந்திருக்க முடியுமா?*

 _என் இனத்திற்கு செய்த 🥇 *முதல் சாதனை...*  அது தான் எங்கள் *சாதனை* .🥇எங்கள் இனத்திற்காக இனிசாதனைகள் தொடரும்...._

*எங்களில் மாநிலப் பொறுப்பில் உள்ளவர்கள் முதல் கடைசிப் பொறுப்பில் உள்ள அத்தனை பேரும் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களே...அதனால் தான் அத்தனை கடுமையான போராட்டத்தினை முன்னெடுக்க முடிந்தது*

*அந்த மாவட்ட மாறுதல் மட்டும் வந்திருக்காவிட்டால் வேறு எதிலும் எங்களை நம்பி வந்திருக்கமாட்டார்கள்.. அதனாலேயே இந்த  வினாக்களை உங்களிடம் தொடுத்திருப்பார்கள்..*

🤔🤔🤔🤔🤔
 _தவறேதும் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை ..._
_தவறு ஏதாவது செய்திருந்தால் சொல்லுங்கள்.. நாங்கள் எங்களது தவறை சரி செய்து கொள்கிறோம்.. நாங்கள் எந்தவொரு தவறும் ஏற்படாதவாறு மிகத் தெள்ளத் தெளிவாக நிதானமாக அடி எடுத்து வைக்கிறோம்..._

*அரசும் எங்களது இந்த 4நாள் போராட்டத்தினை ஒடுக்க சட்டப் பூர்வமாக பல நடவடிக்கையை எடுத்து தோற்றுப் போனதை நீங்கள் அறியார்*..

*நாங்கள் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியும் வெற்றி என்பதை மேலும் மேலும் உறுதியாக்குகின்றோம்..*
💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼

 *எட்டாவது ஊதியக் குழு அமல்படுத்தப் பட்ட பொழுது குழப்பத்தை ஏற்படுத்தி ஊதிய நிர்ணயம் செய்வதை மறுத்து ஊதியக் குழுவிற்கு கடிதம் அளித்துள்ளீர்கள்* *என குறிப்பிட்டுள்ளீர்கள்!*

*மூத்த ஆசிரியர் இனமே!!*
*நீங்கள் இதுவரை நீதிமன்றம் செல்லாமலும்,* *நீதிமன்ற நடவடிக்கைகளில் முழுவதுமாக ஈடுபடாத காரணத்தினால் நாங்கள்  அவசர வழக்காக வழக்கு தொடுத்ததை நீங்கள் அறியவில்லை...!*

_அவற்றை எல்லாம் சட்ட வல்லுநர்களுடன்👨🏻‍🎓 கலந்தாலோசித்து தான் செயல்படுகிறோம்._

*அதை தொடர்ந்து 👨🏻‍🎓வழக்கும் மிக விரைவாக சென்று கொண்டிருக்கிறது👨🏻‍🎓..அதிலும் கட்டாயமாக வெற்றி பெறுவோம்..*

*தற்போது நடைபெற்ற போராட்ட பேச்சு வார்த்தையில் கூட அரசு துளியளவும் இறங்கி வரவில்லை என்ற பதிவினை பதிவிட்டுள்ளீர்கள்..*
🚑🚑🚑🚑🚑🚑
*_எங்களது போராட்டத்தினை கண்ட அரசு போராட்டத்தை எப்படியாவது முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என நான்கு நாட்களும் தொடர்ந்து பேச்சுவார்த்தையை நடத்தி முடித்து விட வேண்டும் என்ற உத்வேகத்திலேயே செயல்பட்டனர்.. நாங்கள் கேட்ட அனைத்திற்கும் அரசு இறங்கி வந்துள்ளனர்.._*

*எங்களது கோரிக்கை வெற்றியும் பெற்றுள்ளது...*
_தாங்கள் அறிந்து கொள்ள...

*ஒரு நபர் ஊதியக் குழு வரும் வரை பொறுத்துக் கொள்ளத் தான் வேண்டும்.._*
*_கோரிக்கை. வெற்றியா..?தோல்வியா..? என்பதை அந்த ஒருநபர் குழு அறிக்கை வெளிக்காட்டும்..._*

*இதுவரை சுமார் 50க்கும் மேற்பட்ட போராட்டத்தினை நடத்தியதாக தேதி வாரியாக குறிப்பிட்டுள்ளீர்கள். ..  வாழ்த்துக்கள்* _தோழரே..அத்தனை போராட்டங்களை நாங்கள் முன்னெடுக்கவில்லை.._
*ஆனால் இந்த 50 போராட்டங்களில் எங்களுக்கென தனியாக ஒரு போராட்டத்தையாவது நடத்தினீர்களாக என்பதை அறிய விரும்புகிறோம்...*
*எத்தனை போராட்டம் முன்னெடுக்கிறோம் என்பதை பொறுத்து அமைவதில்லை வெற்றி....!!*
✌🏼✌🏼✌🏼✌🏼✌🏼✌🏼✌🏼✌🏼
*எப்படிபட்ட போராட்டம் என்பதை பொறுத்தே வெற்றி அமையும்.. வெற்றுக் கைகளோடு திரும்ப நாங்கள் ஒன்றும் வெறும் போராளிகள் அல்ல.. இனத்திற்காக உயிரையும் கொடுக்கும் உண்மை போராளிகள்... உரிமையை வென்றெடுக்க உயிரையும் கொடுக்க தயாராவோம்..*


*இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த இந்த போராட்ட வெற்றி என்பது 99 சதவீதம் நிறைவேறிவிட்டது..* *1 சதவீதம் பிறரின் தூண்டுதலின் பேரில் அரசு ஏமாற்றினால் உலகமே கண்டிராத போராட்டத்தை நடத்தி என் இடைநிலை ஆசிரியர்கள் இனத்தை காத்திடுவோம்..*
😡😡😡😡😡😡😡😡
*நமக்கு நாம் எதிரிகள் அல்ல.. என்றைக்கும் நாங்கள் உங்களை அப்படி பார்த்ததும் இல்லை.. உங்கள் வழியில் நீங்கள் போராட்டத்தை கையில் எடுங்கள்..*
🤝🏼🤝🏼 *எங்கள் வழியில் நாங்கள் போராட்டத்தை கையில் எடுக்கிறோம்.. போராடுவோம் வெற்றி கிட்டும் வரை தொடர்ந்து போராடுவோம்.*
*மேற்கண்ட பதிவுகள் யாரையும் புண்படுத்தவோ குற்றம் சுமத்தவோ அல்ல..* 🤝🏼🤝🏼

👍 _உங்களது கேள்விகளுக்கு எங்களின் சிற்சில விளக்கங்கள்...👆👆👆 தேவைப்படின் இன்னும் கூட அதிகமாக தருகிறோம்._ 👍

🤺🤺🤺🤺🤺🤺🤺🤺🤺
✍🏼 *இவண்..*✍🏼

*ஜே.ராபர்ட்*
*2009& TET

No comments:

Post a Comment