Sunday, 6 May 2018

கோடை வெப்பத்தில் சூம்பும் ஆரஞ்சுகள்!


வெப்பத்தின் தாக்கத்தாலும் , நீர் தட்டுப்பாடு கடுமையாகியுள்ளதாலும் பழங்கள் மற்றும் இதர பயிர்களின் உற்பத்தி ஆபத்தில் சிக்கியுள்ளது.

முந்தைய ஆண்டுகளில் நிலவிய கோடைக்கால தண்ணீர் தட்டுப்பாட்டை விட நடப்பு ஆண்டின் தண்ணீர் தட்டுப்பாடு 30 விழுக்காடு கடுமையாக உள்ளது. விதர்பா பிராந்தியத்தில் பயிரிடப்பட்டுள்ள கனிகளும், நாக்பூரில் பயிரிடப்பட்டுள்ள ஆரஞ்சுப் பழங்களும் தண்ணீர் தட்டுப்பாட்டின் தாக்கத்தைச் சுமந்து கொண்டிருக்கின்றன. ஏனெனில் இப்பகுதிகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் வற்றிவிட்டதால் கடுமையான நீர்த்தட்டுப்பாடு நிலவி வருகிறது. வெப்பத்தின் தாக்கமும், தண்ணீர் தட்டுப்பாடும் தொடர்ந்தால் நிலைமை மேலும் மோசமாகக் கூடும்.

வெங்காயம், நிலக்கடலை, பழங்கள் போன்ற பயிர்களுக்குப் பாசனம் வழங்கத் தண்ணீரே இல்லாத நிலை உருவாகியுள்ளது. இதனால் இழப்புகளும் அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில் ஆரஞ்சுப் பழங்களின் உற்பத்தி 50 விழுக்காடு முதல் 80 விழுக்காடு வரை சரிவடையும் என்று ஆரஞ்சு விவசாயிகள் தெரிவித்திருந்தனர். மேலும், வெப்பத்தின் தாக்கத்தாலும், தண்ணீரின் போதாமையாலும் மாதுளை, சீத்தாப்பழம், எலுமிச்சைப் பழம் போன்ற தோட்டக்கலை பயிர்களும் ஆபத்தில் சிக்கியுள்ளன. விதர்பாவின் வேளாண் பிராந்தியத்தில் கடுமையான நீர்த் தட்டுப்பாடு நிலவி வருவதால், அங்குச் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

No comments:

Post a Comment