Thursday, 3 May 2018

கட்டுக்கடங்கா வங்கி மோசடிகள்!

கடந்த ஐந்தாண்டுகளில் சுமார் பல்வேறு வங்கிகளில்
ஒரு லட்சம் கோடி ரூபாயை உள்ளடக்கிய 23,000க்கும் அதிகமான வங்கிக் கடன் மோசடி புகார்கள் பதிவாகியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2016-17ஆம் ஆண்டில் சுமார் 5,000 வங்கி மோசடி புகார்கள் பதிவாகியுள்ளன. ஏப்ரல், 2017 முதல் மார்ச் 1, 2018 வரை மொத்தம் 5,152 வங்கி மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வங்கிக் கடன் மோசடி புகார்கள் குறித்த தகவல் அறியும் உரிமை மனுவுக்குப் பதிலளிக்கையில் ரிசர்வ் வங்கி இத்தகவல்களை வழங்கியுள்ளது. இந்த மோசடிகளில் மிக அதிகமான தொகையாக ஏப்ரல், 2017 - மார்ச் 1, 2018 வரையிலான காலகட்டத்தில் 28,459 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2016-17ஆம் ஆண்டில் 23,933 கோடி ரூபாயை உள்ளடக்கிய 5,076 மோசடி புகார்கள் பதிவாகியுள்ளன.

2013ஆம் ஆண்டு முதல் மார்ச் 1, 2018 வரை ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை உள்ளடக்கிய 23,866 வழக்குகள் பதிவாகியுள்ளன. அனைத்துப் புகார்களையும் ஒன்றாகச் சேர்த்தால் மோசடி செய்யப்பட்ட மொத்த தொகையின் மதிப்பு 1,00,718 கோடி ரூபாய் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2013-14ஆம் ஆண்டில் 10,170 கோடி ரூபாயை உள்ளடக்கிய 4,306 மோசடி புகார்கள் பதிவாகியுள்ளன. 2014-15ஆம் ஆண்டில் 19,455 கோடி ரூபாயை உள்ளடக்கிய 4,639 மோசடி புகார்கள் பதிவாகியுள்ளன. 2015-16ஆம் ஆண்டில் 18,698 கோடி ரூபாயை உள்ளடக்கிய 4,693 மோசடி புகார்கள் பதிவாகியுள்ளன. மேலும் ரிசர்வ் வங்கி தனது பதிலில், “ஒவ்வொரு வழக்கு குறித்தும் அது தொடர்பான விவரங்கள் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளது.

No comments:

Post a Comment