Sunday, 6 May 2018

இந்த ஆண்டு அவ்வளவு சாதாரணமாக கடந்துவிடாது: பகீர் கிளப்பும் சென்னை வானிலை மையம்


வழக்கத்தைவிட இந்தாண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச் சந்திரன் கூறுகையில்,
மே மாதம் முழுவதும் வெப்ப நிலை அதிகமாக காணப்படும். கிழக்குத் தொடர்ச்சி மலையையொட்டி உள்ள பகுதிகளான வேலூர், திருவண்ணாமலை, சேலம், திண்டுக்கல், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக மாலை அல்லது இரவு கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள பகுதிகளான கோவை, தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கோடை மழை பெய்யும்.
மழை இல்லாத காலங்களில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும்.அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.கத்திரி, அக்னி நட்சத்திரம் போன்ற சொற்கள் வானிலை தொடர் பான ஆய்வுகளில் இல்லை.
கோடை வெயில் என்றே குறிப்பிடுகிறோம். இந்தாண்டு கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட 0.5 முதல் 1 டிகிரி வரை அதிகமாக இருக்கும்' என்று இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment