Thursday, 12 April 2018

தாஜ்மஹால் வளாகத்தின் தூண் இடிந்து விழுந்தது!!!

*🔴ஆக்ராவில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததில்
தாஜ்மகால் வளாகத்தில் உள்ள தூண் இடிந்து விழுந்தது*


*"உத்தரப்பிரதேசத்தின் ஆக்ராவில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததில் தாஜ்மகால் வளாகத்தில் உள்ள தூண் இடிந்து விழுந்தது. ஆக்ரா நகரில் நேற்றிரவு மணிக்கு 130கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது.

அப்போது சுமார் ஒருமணி நேரம் பலத்த மழையும் பெய்தது. இதில் தாஜ்மகால் நுழைவாயில் அருகில் உள்ள 12அடி உயரத் தூண் இடிந்து விழுந்தது. இரவு நேரத்தில் சுற்றுலாப் பயணிகள் எவரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை.

அதேநேரத்தில் மதுரா மாவட்டத்தின் பிரஜ் என்னுமிடத்தில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. அப்போது வீடு இடிந்து விழுந்ததில் 3பேர் உயிரிழந்தனர். மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் மழை தொடர்பான நிகழ்வுகளில் 12பேர் உயிரிழந்தனர். மதுரா மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் 80விழுக்காடு பயிர்கள் சேதமடைந்துள்ளன.

No comments:

Post a Comment