Wednesday, 11 April 2018

கோயிலுக்கு ஜீன்ஸ் அணிந்து செல்லத் தடை!

பெங்களூருவில் உள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோயிலுக்கு ஜீன்ஸ் ஸ்லீவ்லெஸ்
டாப்ஸ் அணிந்து செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆர்ஆர் நகரில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவில் உள்ளது. இங்கு வருகை புரியும் பக்தர்களுக்கு, கோயில் நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, ஆண்கள் வேஷ்டி அல்லது பேண்ட் ஷர்ட் அணிந்து வரலாம். பெர்முடாஸ் அணிந்து வரக்கூடாது. அதேபோல் பெண்கள் புடவை அல்லது துப்பட்டாவுடன் கூடிய சுடிதாரை அணிந்து வரலாம். ஷர்ட், மினி-ஸ்கர்ட், மிடீஸ், ஸ்லீவ்லெஸ் டாப்ஸ், லோ ஹிப் ஜீன்ஸ், ஷார்ட், லென்ந்த் டிஷர்ட் ஆகியவை அணிந்து வரக்கூடாது.



18 வயதுக்கு உட்பட்ட பெண்கள், முழு நீள கவுன்கள் அணிந்து வரவேண்டும். பெண்கள் தலைமுடியை விரி கோலமாக கோயிலுக்குள் வர கூடாது. தலைமுடியை க்ளிப் அல்லது ரப்பர் பேண்ட் கொண்டு கட்ட வேண்டும். இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் கோயில் வாயிலில் உள்ள அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

கோயில் அறக்கட்டளையின் உறுப்பினர் ஹயகிரீவா ஆச்சார், இந்த விதிமுறைகள் 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைமுறையில் உள்ளது. ஆனால், ஆடை கட்டுப்பாடுகளை மீறிய எந்தவொரு பக்தருக்கு அனுமதி மறுக்கவில்லை. அவர்களிடம் உரிய ஆடைகளை அணிந்து வருமாறு அறிவுரை மட்டுமே கூறியுள்ளோம்.

சமீப காலமாக இளைஞர்கள் ஷார்ட்ஸ் அணிந்து வருகின்றனர். இதனால், மீண்டு ஆடை கட்டுப்பாடுகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. நம் பாரம்பரியத்தை நாம் கடைப்பிடிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஜேபி நகரைச் சேர்ந்த தனஞ்செய பத்மனபச்சார் என்னும் பக்தர், “ஆண்களும், பெண்களும் சமம் என்ற காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வரும் நிலையில், இந்தக் கட்டுப்பாடுகள் தேவையில்லாதது. கடவுளின் பார்வையில் அனைவரும் சமம். அதனால் ஆண்கள் வேஷ்டி அல்லது ஷார்ட்ஸ், பெண்கள் ஜீன்ஸ் அல்லது புடவை அணிவதால் மட்டும் என்ன மாற்றம் ஏற்படபோகிறது. எல்லோருக்கும் பக்தி என்பது ஒன்று தான்” எனத் தெரிவித்துள்ளார்.

நேத்ரா கஷ்யாப் என்னும் பக்தர், “ஆடை கட்டுப்பாடுகள் மற்ற மதத்திலும் உள்ளது. கல்லூரிகளிலும் கூட ஆடை கட்டுப்பாடு உள்ளது. கோயிலுக்குள் விதித்தால் மட்டும் ஏன் தடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment