Friday, 13 April 2018

பலன் தரும் பனங்கற்கண்டு!


நம் முன்னோர் பனங்கற்கண்டை சளி மற்றும் இருமலுக்குப் பயன்படுத்தினர். மேலும் தொண்டைக் கரகரப்பு, சளியை வெளியேற்றுதல் மற்றும் இருமல் குறைதலுக்குப் பனங்கற்கண்டை வாயில் போட்டு அந்த உமிழ்நீரை விழுங்கினால் போதும்.

கொஞ்சம் சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று தின்றால் உங்கள் வாய் துர்நாற்றம் காணாமல் போகும்.

பாலில் பனங்கற்கண்டை சேர்த்துக் காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாகத் தொண்டைப்புண், வலி அகலும். பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுரத்தினால் ஏற்படும் வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.

தீராத சளி பிரச்சினை இருந்தால் அதற்கு 2 பாதாம் பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு, அரை டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள் பொடி சேர்த்து மிக்ஸியில் போட்டுப் பொடி பண்ணி பாலுடன் கலந்து குடித்தால் போதும். உங்கள் சளி பிரச்சினை காணாமல் போகும்.

தொண்டைக் கட்டிக்கொண்டு பேச முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? அரை டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள், அரை டேபிள்ஸ்பூன் நெய் மற்றும் அரை டேபிள்ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தொண்டை வலி குணமாகும்.

உங்களுக்கு எப்பொழுதும் சோர்வாக இருப்பது மாதிரி தோன்றுகிறதா? அதற்கு அரை டேபிள்ஸ்பூன் பசு மாட்டு நெய்யுடன் சிறிது பனங்கற்கண்டு மற்றும் சிறிது நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டால் போதும் மிகவும் சுறுசுறுப்பாக மாறிவிடுவீர்கள்.

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களைத் தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்குத் தேவையான வெப்பத்தைத் தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலைச் சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.

சிறிது பனங்கற்கண்டு, பாதாம் பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால் உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கும். மேலும் கண்பார்வை அதிகரிக்கும்.

உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்தப் பனங்கற்கண்டை பாதாம் மற்றும் மிளகுத்தூளுடன் சேர்த்து வாரத்துக்கு இருமுறை சாப்பிட்டால் போதும். உங்களை எந்த நோயும் அண்டாது.

2 டேபிள் ஸ்பூன் வெங்காய ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால் சிறுநீரகக் கற்கள் பிரச்சினை சரியாகும்.

இன்னும் ஏன் வெயிட் பண்ணுரிங்க இப்போதே இந்த மருத்துவக் குணம் வாய்ந்த கற்கண்டை பயன்படுத்தி உங்கள் உடல் உபாதைகளிலிருந்து விடுபடுங்கள்.

கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவற்றை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது. இதை அருந்துவதால் இதய நோய் குணமாகும். இதயம் வலுவடையும்.

No comments:

Post a Comment