Sunday, 8 April 2018

குறைந்த ஊதிய வேலை: பின்தங்கிய இங்கிலாந்து!


குறைந்த ஊதிய வேலைகள் உருவாக்கத்தில் இங்கிலாந்து மோசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்தின் தேசிய பொருளாதாரம் மற்றும் சமூக ஆய்வு நிறுவனம் (என்.ஐ.இ.எஸ்.ஆர்.) ஏப்ரல் 6ஆம் தேதியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "குறைந்த ஊதிய வேலைகளை உருவாக்குவதில், பொருளாதாரத்தில் முன்னேறிய மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இங்கிலாந்தின் வளர்ச்சி பின்தங்கியதாக உள்ளது. குறைந்த ஊதிய வேலைகளை உருவாக்குவதில் ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் இங்கிலாந்து 20 முதல் 30 சதவிகிதம் பின்தங்கித்தான் உள்ளது.

இதில் வேளாண்துறை, கலை, பொழுபோக்கு உள்ளிட்டத் துறைகளில்தான் குறைந்த ஊதிய வேலைகள் உருவாக்கம் அதிகளவில் குறைந்துள்ளது. இந்தத் துறைகளில் ஊழியர்களின் திறனை மேம்படுத்தி, முதலீட்டை அதிகரித்தால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். மேலும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதும் இத்துறையின் வளர்ச்சிக்குப் பங்காற்றும். குறைந்த ஊதிய வேலைகளை உருவாக்குவதில் மிக மோசமான வளர்ச்சியைப் பெற்ற நாடாக இத்தாலி விளங்குகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment