Monday, 9 April 2018

பி.எப்., தொகை அறிய மூன்று எளிய வழிகள்!!!


தொழி­லாளர் சேம­நல நிதி­யான, பி.எப்., உறுப்­பி­னர்கள், தங்கள் கணக்கில் சேர்ந்­துள்ள தொகை பற்­றிய விப­ரத்தை, உமாங் செயலி மற்றும் பி.எப்., இணை­ய­தளம் மூலம் எளி­தாக அறி­யலாம்.அரசு சேவைகள் தொடர்­பான தக­வல்­களை, ஓரி­டத்தில் பெற உதவும் உமாங் (UMANG app) செய­லியில், பி.எப்., சேவையை தேர்வு செய்து, அதன் பின் ஊழி­யர்கள் சார்ந்த சேவைகள் பகு­தியை அணு­கு­வதன் மூலம் இந்த தக­வலை பெறலாம்.
முதல் முறை பய­னாளி என்றால் உமாங் செய­லியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதே போல, பி.எப்., இணையத்தில் நுழைந்து, இ-பாஸ்புக் இணைப்பை, ‘கிளிக்’ செய்ய வேண்டும். இதே போல பி.எப்., இணை­ய­த­ளத்தில் நுழைந்து இ-பாஸ்புக் இணைப்பை கிளிக் செய்ய வேண்டும். (https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login.jsp). இதன் பிறகு நிரந்­தர கணக்கு (யு.ஏ.என்) எண் மற்றும் பாஸ்­வேர்டை டைப் செய்ய வேண்டும். பின்னர் உறுப்­பினர் ஐ.டியை கிளிக் செய்து பி.எப்., தொகை விப­ரத்தை அறி­யலாம்.
உமாங் செயலி மூலமே குறுஞ்­செய்தி அல்­லது மிஸ்டு கால் மூலம், பி.எப்., தொகையை அறிந்து கொள்ளும் வழி­மு­றையை பற்­றியும் தெரிந்து கொள்­ளலாம். நிரந்­தர கணக்கு எண் உள்ள­வர்கள், பதிவு செய்த மொபைலில் இருந்து, 77382 99899 என்ற எண்­ணுக்கு குறுஞ்­செய்தி மூலம் கோரிக்கை அனுப்பி, தகவல் பெறலாம்.
நிரந்­தர கணக்கு எண்­ணிற்­கான, யு.ஏ.என் வலை­வா­சலில் பதிவு செய்­துள்ள உறுப்­பி­னர்கள், 011 -2290 1406 என்ற எண்­ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தும், தகவல் பெறலாம். இதன் மூலம், பி.எப்., தொகை மற்றும் கடை­சி­யாக செலுத்­தப்­பட்ட தொகையை அறி­யலாம்.


No comments:

Post a Comment