Tuesday, 10 April 2018

ஏஎம் - பிஎம் - மிலிட்டரி: எது சரியான டைம்?


நம்மில் இன்னும் பலருக்கு நேரத்தைக் குறிக்கும் ஏஎம், பிஎம் என்றால் என்ன என்பது தெரிவதில்லை. அதிலும் மதியம் மற்றும் நள்ளிரவு நேரங்களை எப்படி குறிப்பிடுவது என்பதும் தெரிவதில்லை.

ஏஎம், பிஎம் என்பவை லத்தீன் மொழியிலிருந்து வந்த வார்த்தைகளாகும். ஏஎம் என்பது ‘ஆன்ட்டி மெரிடம்’ - அதாவது மதியத்துக்கு முந்தைய நேரம். பிஎம் என்பது ‘போஸ்ட் மெரிடம்’ - அதாவது மதியத்துக்குப் பிந்தைய நேரமாகும்.

ஆங்கில மொழியில் ஏஎம் மற்றும் பிஎம் குறி்த்து டன் கணக்கில் தகவல்கள் கிடைக்கின்றன. இந்த 12 மணி நேர முறை எப்படி வந்தன? எப்போது வந்தன? இதுகுறித்து ஆராயும்போது அவை தொன்மையான எகிப்து காலத்தில் உருவானதாகவும் மறுமலர்ச்சி காலத்தில் உருவானதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அப்போது ஐரோப்பா முழுவதும் உள்ள தேவாலயங்களிலும் மாளிகைகளிலும் இதுபோன்ற 12 மணி நேர கடிகாரங்கள் பொருத்தப்பட்டிருந்ததாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன.

இன்றைக்கு உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகள் 24 மணி நேர முறையைப் பின்பற்றுகின்றன. ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட நாடுகள் 12 மணி நேர முறையைப் பின்பற்றுகின்றன. இதில் சிறிய குழப்பமும் நிலவுகிறது. அது மதியத்தையும் நள்ளிரவையும் எப்படி அழைப்பது? இதில் அமெரிக்க மக்கள் வழக்கமாகப் பயன்படுத்துவது போன்று மதியத்தை 12 மணி நேரம் நள்ளிரவை 12 மணி நேரம் எனவும் அழைக்கிறார்கள்.

ஆனால், மதியத்திற்கு முந்தைய 11 மணியிலிருந்து 12 மணி நேரத்தையும் அதே போன்று நள்ளிரவுக்கு முந்தைய 11 மணியிலிருந்து 12 மணி நேரத்தை எப்படி அழைப்பது? ஆனால், அதை ஏஎம் அல்லாத பிஎம் அல்லாத நேரம் என்றே அழைக்கலாம். ஏனெனில், இந்த நேரம் பகலுக்கு முந்தைய நேரம். அதே போல நள்ளிரவுக்கு முந்தைய நேரமாகிறது அல்லவா?

இதைத் தவிர்ப்பதற்கு ஒரே வழி நாம் மிலிட்டரி (ராணுவ) நேர முறையான 24 மணி நேர முறைக்கு மாறுவதுதான். இதில் குழப்பங்கள் வர வாய்ப்புகள் குறைவு.

No comments:

Post a Comment