Thursday, 5 April 2018

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!


சென்னை ஐஐடியில் காலியாக உள்ள உதவி பேராசிரியர், பேராசிரியர், இணைப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: உதவி பேராசிரியர், பேராசிரியர், இணைப் பேராசிரியர்

சம்பளம்: மாதம் ரூ.1,00,583 - ரூ.2,16,125/-

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் முதல் வகுப்பில் முனைவர் பட்டம் (பிஹெச்.டி) பெற்றிருக்க வேண்டும். அல்லது அதற்குச் சமமான துறையில் படித்திருக்க வேண்டும்.

மேலும் உதவி பேராசிரியர் பணிக்கு மூன்று ஆண்டுகளும், இணைப் பேராசிரியர் பணிக்கு ஆறு ஆண்டுகளும், பேராசிரியர் பணிக்குப் பத்து ஆண்டுகளும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 13.04.2018

மேலும் விவரங்களுக்கு https://facapp.iitm.ac.in/2018b/sites/default/files/R218-Advertisment.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment