Wednesday, 11 April 2018

ப்ளஸ் 2 : விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்!


ப்ளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, இன்று(ஏப்ரல் 11) தொடங்கியது.

ப்ளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச், 1ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற்றன. ப்ளஸ் 1 பொதுத் தேர்வுகள், மார்ச், 7ஆம் தேதி தொடங்கின. ஏப்ரல் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 16ஆம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

இந்நிலையில், ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மொத்தம், 8.66 லட்சம் மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தப்படவுள்ளன. இதற்கான பணிகளில், 2.50 லட்சம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். முதற்கட்டமாக, இன்று அனைத்துத் தேர்வு மையங்களிலும், தலைமை விடை திருத்துனர் மற்றும் தலைமை கண்காணிப்பாளர் ஆகியோர் விடை திருத்தும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

நாளை (ஏப்ரல் 12) முதல் மற்ற விடை திருத்துனர்கள், இப்பணியில் ஈடுபட உள்ளனர். ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் , மே, 16ல் வெளியிடப்படும் என அரசு அறிவித்திருந்தது. எனவே, மே முதல் வாரத்திற்குள், ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகளை முடிக்க அரசு தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment