Thursday, 15 March 2018

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு கணக்குப்பதிவியல் வினாத்தாள் வாட்ஸ் அப்பில் லீக் ஆனதால் பரபரப்பு!!!

12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுக்கான, கணக்குப்பதிவியல் வினாத்தாள்
வாட்ஸ் அப்பில் லீக் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வினாத்தாள் வெளியானது குறித்து சிபிஎஸ்இ விசாரணை நடத்தி வருகிறது. தேர்வை ரத்து செய்வது குறித்தும் சிபிஎஸ்இ ஆலோசனை நடத்தி வருகிறது.

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் 5-ம் தேதி தொடங்கி நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இதற்காக நாடு முழுவதும் 4,138 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவுக்கு வெளியே 71 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.



இந்நிலையில், இன்று கணக்கு தேர்வு 2-ம் தாள் நடைபெற்று வரும் நிலையில், இந்த தேர்வுக்கான கேள்வித்தாள் வாட்ஸ் ஆப்பில் லீக் ஆகியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் கணக்கு தேர்வு கேள்வித்தாள் எப்படி லீக் ஆனது? எப்பொழுது லீக் ஆனது? என்ற விவரம் குறித்து தெரியவில்லை.

கணக்கு தேர்வு கேள்வித்தாள் எப்படி லீக் ஆனது என்பதை அறிய சிபிஎஸ்இ உயர் அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது.

இதைக்குறித்து டெல்லியின் கல்வி அமைச்சர் மணிஷ் சிசோடியா கூறியதாவது:- கணக்கு தேர்வு கேள்வித்தாள் லீக் ஆகி இருப்பதை உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக டெல்லி அரசு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. வினாத்தாளை வெளியிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என டெல்லி கல்வி அமைச்சர் மணிஷ் சிசோடியா கூறியுள்ளார்

கணக்கு பரீட்சை ரத்து செய்யப்படுமா? என்பது குறித்து எந்தவொரு தகவலும் இல்லை 

No comments:

Post a Comment