Sunday, 4 February 2018

வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் ரிலையன்ஸ்!

அசாமில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 80,000 வேலைவாய்ப்புகளை
உருவாக்கவுள்ளதாக இந்தியாவின் முதல் இடத்திலிருக்கும் பணக்காரரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

அசாமில் நடந்த 2018ஆம் ஆண்டுக்கான சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முகேஷ் அம்பானி அசாமில் ரூ.2,500 கோடி முதலீடு செய்து 80,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவோம் என்றார். இதுகுறித்து நேற்று (பிப்ரவரி 3) பிடிஐ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அசாமில் பல்வேறு துறைகளில், குறிப்பாக சில்லறை வர்த்தகம், தொலைத்தொடர்புத் துறை, சுற்றுலாத்துறை மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளில் ரூ.2,500 கோடி முதலீடு செய்து குறைந்தபட்சம் 80,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவுள்ளோம் என்று முகேஷ் அம்பானி கூறியுள்ளார்" என்று தெரிவித்துள்ளது.

முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேலும் பேசிய முகேஷ் அம்பானி, "ரிலையன்ஸ் நிறுவனம் அசாமில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ந்து முதலீடு செய்யும். அசாமில் ஏற்கனவே உள்ள 2 சில்லறை விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையை 40 ஆக உயர்த்தப்படும். 27 பெட்ரோல் நிலையங்கள் 165 ஆக உயர்த்தப்படவுள்ளது. இந்தப் புதிய நிறுவனங்களில் 145 நிறுவனங்கள் அசாமின் நகராட்சிகளில் அமையவுள்ளது. அசாமின் தொலைத்தொடர்புத் துறையில் ரிலையன்ஸ் ஏ வகையில் உள்ளது. தற்போதைய நிலையிலிருந்து 5 மடங்கு வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதே எங்கள் இலக்காகும்" என்றார்.

No comments:

Post a Comment