Sunday, 29 November 2015

விடுப்பு விதிகளை அறிந்து கொள்வோம்!!!

*தகுதிகாண் பருவத்தில்உள்ளவர்கள் EL எடுத்தால்probation periodதள்ளிப்போகும்.
பணியில் சேர்ந்து ஒரு வருடம்முடிந்ததும் ஈட்டியவிடுப்பினை ஒப்படைத்து பணமாகப்பெறலாம். ஆண், பெண்இருவரும். தகுதிகாண் பருவம் முடிக்கும்முன்பு (பணியில் சேர்ந்து
2வருடங்களுக்குள்)மகப்பேறு விடுப்பு எடுத்தால்அந்த வருடத்திற்கான EL -ஐஒப்படைக்க முடியாது. ELநாட்கள் மகப்பேறு விடுப்புடன்சேர்த்துக்கொள்ளப்படும்.(உதாரணமாக - அவரது கணக்கில் 10 நாட்கள் EL உள்ளது என்றால் மகப்பேறு விடுப்பில் அந்த 10 நாட்களை கழித்துவிட்டு (180-10=170) மீதம் உள்ள 170 நாட்கள் மட்டுமே வழங்கப்படும்.
எனவே மகப்பேறு விடுப்பு எடுக்கும் முன்பே கணக்கில் உள்ள EL-ஐ எடுத்துவிடுவது பயனளிக்கும்)

*வருடத்திற்கு 17 நாட்கள் EL.அதில் 15நாட்களை ஒப்படைத்து பணமாகப்பெறலாம் .

*மீதமுள்ள 2 நாட்கள்சேர்ந்துகொண்டே வரும்அதை ஓய்வுபெறும்பொழுது ஒப்படைத்து பணமாகப்பெறலாம்.

*21 நாட்கள் ML எடுத்தால்ஒரு நாள் EL கழிக்கப்படும்.

��வருடத்திற்கு மொத்தம் 365நாட்கள்.இதை 17ஆல் (EL)வகுத்தால் 365/17=21.

* எனவே 21 நாட்கள் MLஎடுத்தால் ஒரு நாள் EL என்றகணக்கில் கழிக்கப்படுகிறது.

*மகப்பேறு விடுப்பு எடுத்த வருடத்தில் ஈட்டிய விடுப்பு ஒப்படைக்கும் பொழுது , மகப்பேறு விடுப்பு எடுத்த 6 மாதங்கள் , மற்றும் ML எடுத்த நாட்கள் தவிர்த்து மீதம் வேலை செய்த நாட்களை 21 ஆல் வகுத்து EL கணக்கிடப்படும்.ML & EL எடுத்தது போக மீதம் உள்ள வேலை செய்த நாட்களுக்கு மட்டுமே EL கணக்கிடப்படும்.(CL & RH கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது)

*ஒரு நாள் மட்டும் ELதேவைப்படின்எடுத்துக்கொள்ளலாம்.

*அரசு ஊழியர்களுக்கு மட்டும்வருடத்திற்கு 30 நாட்கள் EL(ஆசிரியர்களுக்கு 17 நாட்கள்மட்டுமே). அதில் 15நாட்களை ஒப்படைக்கலாம்.மீதம் உள்ள 15 நாட்கள்சேர்ந்துகொண்டே வரும்..அதிகபட்சமாக 240 நாட்களைச்சேர்த்து வைத்து ஒப்படைக்கலாம்.அதற்கு மேல்சேருபவை எந்தவிதத்திலும்பயனில்லை.

மாறுதல் / பதவி உயர்வு       *பணியிறக்கம் / நிரவல் போன்றநிகழ்வுகளின் போது பழையஇடத்திற்கும் புதியஇடத்திற்குமிடையே குறைந்தது 8கி.மீ (ரேடியஸ்) இருந்தால்அனுபவிக்காதபணியேற்பிடைக்காலம் ELகணக்கில் சேர்த்துக்கொள்ளப்படும். இதற்கு 30நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.  90 நாட்களுக்குள் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும். (குறைந்தது 5நாட்கள். 160 கி.மீக்கு மேற்படின்அட்டவணைப்படி நாட்களின்எண்ணிக்கை அதிகரிக்கும்)

*ஒருமுறை சரண்டர் செய்தஅதே தேதியில் தான்ஆண்டுதோறும் செய்யவேண்டும் என்ற கட்டாயம்இல்லை.கணக்கீட்டிற்கு வசதியாகஇருக்கவும் Pay Rollல் விவரம்குறிக்க எளிமையாகஅமையவும் ஒரே தேதியில்ஆண்டுதோறும்அல்லது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சரண்செய்வது சிறந்தது.
எவ்வாறாயினும் ஒரு ஒப்படைப்பு நாளுக்கும்அடுத்தஒப்படைப்பு நாளுக்குமிடையே 15நாட்கள் ஒப்படைப்பெனில்ஓராண்டு / 30 நாட்கள்ஒப்படைப்பெனில்இரண்டாண்டு இடைவெளி இருக்கவேண்டும்.

*ஒப்படைப்பு நாள் தான்முக்கியமே தவிரவிண்ணப்பிக்கும்தேதியோ,அலுவலர் சேங்க்ஷன் செய்யும்தேதியோ, ECS ஆகும்தேதியோ அடுத்தமுறை ஒப்படைப்பு செய்யும்போது குறிக்கப்படவேண்டியதில்லை.
*EL ஒப்படைப்பு நாளின்போது குறைந்தஅளவு அகவிலைப்படியும்பின்னர் முன்தேதியிட்டு DAஉயர்த்தப்படும்போது ஒப்படைப்பு நாளில்அதிக அகவிலைப்படியும்இருந்தால் DA நிலுவையுடன்சரண்டருக்குரியநிலுவையையும்சேர்த்து சுதந்தரித்துக்கொள்ளலாம். ஊக்க ஊதியம்முன்தேதியிட்டுப் பெற்றாலும்நிலுவைக் கணக்கீட்டுக்காலத்தில்ஒப்படைப்பு தேதி வந்தால்சரண்டர் நிலுவையும் பெறத்தகுதியுண்டு.

*பணிநிறைவு / இறப்பின்போது இருப்பிலுள்ள ELநாட்களுக்குரிய (அதிகபட்சம்240) அப்போதைய சம்பளம்மற்றும்அகவிலைப்படி வீதத்தில்கணக்கிடப்பட்டு திரள்தொகையாகஒப்பளிக்கப்படும்.

*அதிகபட்சம் தொடர்ந்து 180 நாட்கள் ஈட்டிய விடுப்பு எடுக்கலாம். அதனைத் தொடர்ந்து மருத்துவ விடுப்பு எடுக்கலாம்.180 நாட்களுக்குமேற்பட்ட விடுப்புக்கு வீட்டுவாடகைப்படி கிடைக்காது

No comments:

Post a Comment