Monday, 8 April 2019

தேர்தல் பயிற்சி வகுப்பை முடித்து திரும்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியர் மரணம்...!!

திருவள்ளூர்மாவட்டம் ,பள்ளிப்பட்டு ஒன்றியம் சொரக்காயப்பேட்டை* கிராமத்தைச்சேர்ந்தவர் தாமோதரம்
பாண்டறவேடு கிராமத்தில் நடுநிலைப்பள்ளியில்  இடைநிலை ஆசிரியாராக பணி புரிந்து வருகிறார்

மாற்றுத்திறனாளியான இவருக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டுள்ளது

இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புக்காக சென்னை சென்றவர்
பயிற்சி வகுப்பைமுடித்து தனது இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தார்

Friday, 5 April 2019

யு.பி.எஸ்.சி‌ தேர்வு வினாத்தாள்களை தமிழில் வெளியிட கோரி வழக்கு...!!


இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு வழக்கில் இறுதி விசாரணை தேதி குறிக்கப்பட்டுவிட்டது...!!

2009  TET போராட்டக் குழுவில் இன்றைய 04.04.2019 வழக்கு விசாரணை விவரம்


இன்று நமது வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எட்டப்பட்டது விசாரணையின் பொழுது மற்றொரு தரப்பு மத்திய அரசுக்கு  இணையான ஊதியம் 9300 கோரி தொடர்ந்த வழக்கில் அரசின் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை, என்ற வாதத்தை  முன் வைத்தனர் அதனை மறுத்த நமது வழக்கறிஞர்கள் அந்த வழக்கை வேறு இந்த வழக்கு வேறு அதன் சாராம்சம் வேறு ஆகவே அதனை தனியாக விசாரிக்கும் படி கேட்டுக்

Wednesday, 3 April 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 03.04.19

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 03.04.19
திருக்குறள்


அதிகாரம்:பயனில சொல்லாமை

திருக்குறள்:200

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

விளக்கம்:

சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.

பழமொழி

Monday, 1 April 2019

லைவ் செய்வதில் புதிய கட்டுப்பாடு - ஃபேஸ்புக் கெடுபிடி...!!

ஃபேஸ்புக் மூலம் லைவ் செய்வதில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வர உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில், நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரின் உள்ள அல் நூர் மசூதியிலும், லின்உட் மஸ்ஜித் மசூதியிலும் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர், தாக்குதல் சம்பவத்தை தனது ஃபேஸ்புக்கில் லைவ் செய்தார். மசூதிக்கு காரில் வந்ததிலிருந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடுவது வரை லைவ் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

Sunday, 31 March 2019

அரசுத் துறைத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 13,127 பேர்.! எப்படி தெரியுமா?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நடைபெற்ற குரூப் 1 தேர்வில் குறிப்பிட்ட வயது வரம்பினை மீறிய 13,127 பேர் தேர்வு எழுதியது தற்போது தெரியவந்துள்ளது.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெறும் தேர்வுகளில் குறைந்தபட்ச வயது மற்றும் அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயம்

புதிய அரசாணையை திரும்ப பெற்றால் இன்ஜினியரிங் கவுன்சலிங் நடத்துவோம்: அண்ணா பல்கலை. துணைவேந்தர் தகவல்...,!!

புதிய அரசாணையை உயர்கல்வித்துறை திரும்பபெறும்பட்சத்தில் இன்ஜினியரிங் கலந்தாய்வை நடத்த தயாராக உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறினார்.  கடந்த ஆண்டு முதல்முறையாக இணையதளம் மூலம் இன்ஜினியரிங் கலந்தாய்வு நடத்தப்பட்டது.

கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெயிலில் நிற்க வைத்த பள்ளி நிர்வாகம்...!!

கேரளா மாநிலத்தில் தனியார் தொடக்கப்பள்ளி ஒன்றில் கட்டணம் செலுத்தாத இரண்டு மாணவர்களை பள்ளி நிர்வாகம் இரண்டு மணி நேரம் வெயிலில் நிற்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


அதில், ஒரு சிறுவன் கண்பார்வை குறைபாடு உடையவர் என்பது மேலும் அதிர்ச்சியளிப்பதாகஉள்ளது.

தேர்தல் பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை...!!

தேர்தல் பயிற்சிக்கு வராத 8 அரசு ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது.


 இதுகுறித்து மாவட்டத் தேர்தல் அதிகாரி தி.அருண் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு

Thursday, 28 March 2019

வாரம் ஒருமுறை சாலைபாதுகாப்பு உறுதிமொழி' பள்ளிகளுக்கு இயக்குனரகம் உத்தரவு...!!

'வாரத்தில் ஒருநாள், அனைத்து பள்ளி மாணவர்களும், காலை வழிபாட்டு கூட்டத்தில், சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுக்க வேண்டும்' என, பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.பள்ளி கல்வி இயக்குனர், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கை:தமிழகத்தில், அதிகமான சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இந்திய தேசிய குற்றவியல்

இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு பணியிறக்கம் செய்யும் வழக்கு இன்று 28.03.2019 மீண்டும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வருகிறது...!!


சென்னை சுற்று வட்டார பகுதிகளில் இருப்பவர்கள் மரம் நட இடமிருந்தால் அணுகலாம்...!!

சென்னை சுற்று வட்டார பகுதிகளில் இருப்பவர்கள் மரம் நட இடமிருந்தால் சொல்லுங்க, பள்ளமெடுத்து மகத்தான நாட்டு மரங்களை நட்டு தருகிறோம், கட்டணமில்லை

1. மஹோகனி
2. வேங்கை
3. தான்றிக்காய்
4. கடுக்காய் மரம்
5. ஜாதிக்காய்
6. தான்றிக்காய்

Saturday, 23 March 2019

நமது போராட்ட குழுவின் சார்பாக அங்கன்வாடி மையங்களுக்கு பணியிருக்கும் செய்யும் வழக்கு நேற்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்த போது நடந்த விபரங்கள்...!!

தேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...!!

தேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில், ஏப்., 18ல், தேர்தல் நடக்கிறது. இதற்கான கண்காணிப்பு பணியில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில், மாவட்ட தேர்தல் அதிகாரி தலைமையில், மூன்று தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 16 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த பணியில், 24 ஆயிரம் வாக்குச்சாவடி அலுவலர்கள்

நம்புங்க இது 4,000 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கொந்தளிக்கும் ஆசிரியர்கள்...!!

Friday, 22 March 2019

தாகத்தில் தவிக்கப்போகிறதா தமிழகம்?! அபாய கட்டத்தில் நிலத்தடி நீர்..!!

இன்று, உலக தண்ணீர் தினம். இந்த ஒரு நாளில் மட்டும் தண்ணீரின் முக்கியத்துவம் பற்றி பேசிவிட்டு, வழக்கமான பணிகளைத் தொடங்கி விடுவோம். எப்போதும்போல தண்ணீரைச் செலவழிக்க தயங்க மாட்டோம். ஆனால், தண்ணீரை சேமிக்க என்ன செய்கிறோம்? இந்தக் கேள்வியை ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள வேண்டும். காரணம், தண்ணீர்ப் பஞ்சத்தை இன்னும் சில ஆண்டுகளில் அல்லது மாதங்களில் அனுபவிக்க இருக்கிறோம். தமிழகத்தில் 24 மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Tuesday, 19 March 2019

சர்வதேச விண்வெளி நிலையத்தை இன்று வெறும் கண்ணால் பார்க்கலாம்...!!

இந்தியாவைக் கடக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தை இன்று வெறும் கண்ணால் பார்க்கலாம். இன்று (19.03.2019, செவ்வாய்) மாலை சரியாக 6.42 மணிக்கு தெற்கு-தென்மேற்கு திசையில் 11° -இல் இது தெரிய தொடங்கும். வடகிழக்கு திசையில் 12°-இல் புவியில் நிழலில் மறைந்து விடும். 6 நிமிடங்கள் இதை காணலாம். சூரிய ஒளிபடுவதால் பிரகாசமான நட்சத்திரம் போலவும், வேகமாக நகரும் விமானம் போலவும் தெரியும்.

திமுக தேர்தல் அறிக்கை...!!

  மத்திய அரசின் வரி வருவாயில் 60 சதவீதம் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் - ஸ்டாலின் அறிவிப்பு

* தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் தமிழ் மொழியில் செயல்பட நடவடிக்கை - திமுக தேர்தல் அறிக்கை

* வேளாண் துறைக்கு தனியாக பட்ஜெட்  - ஸ்டாலின் அறிவிப்பு.

பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் திடீர் உயர்வு...!!

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் 35-லிருந்து 40 ஆக அதிகரிப்பு.

 பொதுப் பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 50-லிருந்து 45 ஆக குறைப்பு.

பிசி, எம்பிசி, பிசி முஸ்லிம் ஆகிய பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 45-லிருந்து 40 ஆக குறைப்பு.

நாடாளுமன்றத் தேர்தலில் பணியாற்றும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவிருக்கின்றன மதிப்பூதியம் பற்றிய விபரம்...!!